Published : 16 Sep 2018 10:01 AM
Last Updated : 16 Sep 2018 10:01 AM

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் தனது முடிவை அறிவிப்பது சட்ட ரீதியாக சிக்கலானதா?- சட்ட நிபுணர்கள் கருத்து

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் தனது முடிவை அறிவிப்பது சட்ட ரீதியாக சிக்கலானதா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச் சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக் குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்கக்கோரி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘‘இந்த 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து மத் திய அரசுக்கு குறிப்புரைகள் அனுப்பப்பட்டு விட்டதாக ஓர் அனுமானத்தின் அடிப்படையில் சில ஊடகங்கள் விவாதங்களை நடத்தி வருகின்றன.

அவ்வாறு ஊடகங்களில் வெளி யாவது போல எந்தக் குறிப் புரையும் மத்திய அரசுக்கு அனுப்பப் படவில்லை. இந்த விவகாரம் அரசியலமைப்பு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் சிக்கலான விஷயம். அதனால் மிகவும் கவனமுடன் ஆராய்ந்து பரிசீலிக் கப்பட்டு வருகிறது.

மாநில அமைச்சரவையின் பரிந்துரை மற்றும் தீர்ப்புகள் என ஏராளமான பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் கடந்த செப். 14-ம் தேதிதான் ஆளுநர் மாளிகை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்குட் பட்டு நேர்மையான, வெளிப்படை யான முடிவை எடுப்பார்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு ஆளு நர் தனது முடிவை அறிவிப்பது சட்ட ரீதியாக சிக்கலானதா என்பது குறித்து சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்: இது சட்ட ரீதியாக வும், அரசியல் ரீதியாகவும் முரண்பாடுள்ள வழக்கு. தற் போது உச்ச நீதிமன்றம் எந்த வொரு தீர்க்கமான உத்தரவை யும் இதில் பிறப்பிக்கவில்லை. மனுதாரர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் கூறியுள்ளது. அமைச் சரவை முடிவை அப்படியே வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் ஆளுநருக்கு கிடையாது.

‘அப்ளிகேஷன் ஆப் மைண்ட்’ என்பதை சட்ட ரீதியாக முழுமனது டன் ஆவணங்களி்ல் செலுத்தி அவற்றை பரிசீலித்து சட்டத்துக் குட்பட்டுதான் ஆளு நரால் முடிவு எடுக்க முடியும். எடுத்தோம், கவிழ்த்தோம் என உடனடியாக முடிவை அறிவித்து விட முடியாது. அதேபோல மன்னிப்பு வழங்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு முரணாக மாநில அரசால் செயல்பட முடியாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இப்படி பல்வேறு முரண்பாடுகள் இதில் உள்ளன. ஆனால் இந்த 7 பேரையும் விடுதலை செய்வதா, வேண்டாமா என்பதில் எனக்கு தனிப்பட்ட கருத்து ஏதும் கிடையாது. அதேபோல ஆளுநர் தனது முடிவை அறிவிக்கவும் சட்ட ரீதியாக எந்த காலவரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் காலதாமதம் தவிர்க்க முடியாத ஒன்று.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத்: இந்தியாவில் மட்டும் தான் 20, 30 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. மற்ற எந்த நாட்டிலும் இத்தனை ஆண்டுகளுக்கு வழக்குகளை இழுத்தடிப்பது இல்லை. இந்த 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யுமாறு மாநில அரசும் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கோருகிறது.

உச்ச நீதிமன்றமும் அதைத்தான் சொல்லியுள்ளது. ஆனால் இது சட்ட சிக்கல் வாய்ந்த வழக்கு எனக்கூறி ஆளுநர் இனியும் காலதாமதம் செய்வது என்பது ஏற்புடையதல்ல. அதேநேரம் அவரை நிர்பந்திக்க முடியாது என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். சட்ட சிக்கல் இருந்தால் அதைத் தீர்க்க நிபுணர்கள் இருக்கிறார்களே?

சாதாரண சிட்டி சிவில் நீதிமன்றங்களிலேயே வாதங்கள் முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பளிக் கப்பட வேண்டும் என உத்தரவுகள் உள்ளன.

வாதங்களைக் கேட்ட நீதிபதி விரைவாக தீர்ப்பு அளித் தால்தான் அவர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதேபோல இந்த விஷயத்தில் ஆளுநர் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். எனவே இதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜூதீன்: இந்த விஷயத்தில் ஆளுநர் உடனடியாக முடிவு எடுத்துதான் ஆக வேண்டும் என்ற எந்த காலவரம்பும் கிடையாது. அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக் கென தனிப்பட்ட சில அதிகாரங் களை வழங்கியுள்ளது. அந்த அதி காரத்தில் யாரும் தலையிட முடி யாது. அதன்படி அவர், இது தமிழக அமைச்சரவையின் பரிந்துரை என்றாலும் கூட இதில் எத்தனை நாட்களுக்கு வேண்டுமென்றாலும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியும்.

ஆனால் ஒரு முக்கியமான வழக்கில் முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். ஆளுநர் ஒருவேளை காலதாமதம் செய்வதாகத் தெரிந் தால் அதுகுறித்து மீண்டும் நீதி மன்றத்திடம் முறையிட்டுத்தான் பரிகாரம் தேட முடியும். அரசியல் ரீதியாகவும் இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x