Published : 16 Sep 2018 09:51 AM
Last Updated : 16 Sep 2018 09:51 AM

அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை சந்தித்தார்: டிடிவி.தினகரன் தகவல்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், 2 மாதங்களுக்கு முன்பு என்னை சந்தித்து தன்னைக் காப்பாற் றுமாறு கேட்டுக்கொண்டார் என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

அண்ணா பிறந்த நாளை யொட்டி புதுக்கோட்டை கட்டியா வயல் பகுதியில் அமமுக சார் பில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசி யது: டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மூலம் மருத்துவத் துறையில் நாட்டுக்கே முன்னுதாரணமாக விளங்கிய புதுக்கோட்டை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் குட்கா உள் ளிட்ட பல்வேறு முறைகேடுகளால் சிறுமைப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 95 சதவீதம் அதிமுகவினர் எங்கள் பக்கம் தான் உள்ளனர். திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இடைத்தேர்தல் பயத்தில் அமைச் சர்கள் நிதானமின்றி பேசி வருகின்றனர்.

சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு நான் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்னை சந்தித் தார். அப்போது, “நான் வருமான வரித்துறை உள்ளிட்ட துறையின ரின் சோதனையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறேன். மேலும், டெல்லிக்கு என்னை அழைத்துச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. யாரும் என்னை காப்பாற்றுவதாக தெரியவில்லை. என்னைக் காப் பாற்றுங்கள். எப்போதும் உங்க ளுக்கு விசுவாசமாக இருப்பேன்” எனக்கூறி புலம்பினார்.

“எனக்கு விசுவாசமாக இருந்து என்ன பிரயோஜனம். கட்சிக்கே நீங்கள் விசுவாசமாக இல்லையே” என அவரிடம் நான் தெரிவித்தேன்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x