Published : 11 Sep 2018 08:55 AM
Last Updated : 11 Sep 2018 08:55 AM

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடி தங்கைக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணமோசடி செய்துவிட்டு தலை மறைவாகிவிட்ட நீரவ் மோடி வழக் கில் அவரது தங்கை புர்வி மோடிக் கும் இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

நீரவ் மோடி, பஞ்சாப் நேஷ னல் வங்கியின் பிராடி ஹவுஸ் கிளையிலிருந்து ரூ. 13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டார். இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கப் பிரிவு நீரவ் மோடி, அவரது நிறுவனம் மற்றும் குடும் பத்தார் மீது வழக்குப் பதிவு செய் தது. விசாரணையிலிருந்து தப்பிக்க நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மேகுல் சோக்ஸி கடந்த ஜனவரியிலிருந்து தலை மறைவாக உள்ளனர். இதை யடுத்து நீரவ் மோடியின் சொத்துக் கள் முடக்கப்பட்டன. மேலும் நீரவ் மோடியைப் பிடிக்க இன்டர் போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது. சமீபத்தில் இவரது அமெரிக்க தொழில் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி மிஹிர் ஆர் பன்சாலிக்கு எதிராகவும் இன்டர் போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது.

இவர்கள் இன்னும் பிடிபடாத நிலையில், இந்தப் பண மோசடி யில் நீரவ் மோடியின் தங்கை புர்வி மோடிக்கும் தொடர்பிருப்பதால், இவருக்கும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்க அமலாக்கப்பிரிவு கேட்டுக் கொண்டது. இந்த வழக்கின் முதல் குற்றப்பத்திரிகையிலேயே புர்வி மோடிக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

எனவே அமலாக்கப்பிரிவு கேட்டுக்கொண்டபடி நீரவ் மோடி யின் தங்கை புர்வி மோடிக்கும் இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த ரெட் கார்னர் நோட்டீஸின்படி இன்டர்போல் அமைப்பில் உறுப் பினராக உள்ள 192 நாடுகளில் புர்வி மோடி எங்கு கண்ணில் பட்டாலும் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட பிறகு அவரை இந்தியா கொண்டுவருவது, அவரிடம் விசாரணை நடத்துவது போன்றவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x