Published : 11 Sep 2018 08:17 AM
Last Updated : 11 Sep 2018 08:17 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை- பேருந்துகள் வழக்கம்போல் ஓடின; மறியலில் ஈடுபட்ட 15 ஆயிரம் பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து நேற்று நாடு தழுவிய முழுஅடைப்புப் போராட் டத்துக்கு (பாரத் பந்த்) காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. தமிழ கத்தில் திமுக, திராவிடர் கழகம், பாமக, தமாகா, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பாஜக, அதிமுகவுக்கு எதிரான கட்சிகள் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித் திருந்தன.

ஆனாலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அள வில் பாதிக்கப்படவில்லை. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. பள்ளிகள், கல்லூரிகள், மத்திய, மாநில அரசு அலுவல கங்கள் இயங்கின.

பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருந் தன. பெட்ரோல் விற்பனை நிலை யங்கள் 100 சதவீதம் இயங்கின. கோயம்பேடு சந்தையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. முழு அடைப்புப் போராட்டத்தை யொட்டி முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

மறியல் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் நேற்று காலை மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட 400-க் கும் அதிகமானோர் கைது செய் யப்பட்டனர். இதில் திமுகவின் தொமுச பேரவையைச் சேர்ந்த வர்களும் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், ''பெட்ரோல், டீசல் விலை உயர் வுக்கு மோடி அரசின் தவறான கொள்கைகளே காரணம். பெட்ரோ லியப் பொருட்கள் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள அளவுக்கு அதிகமான வரிகளை குறைத்தாலே விலை குறைந்து விடும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் வரை போராடு வோம்'' என்றார்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், திமுக சட்டப் பிரிவு செயலாளர் இரா.கிரி ராஜன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 400-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் மறியல், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மறிய லில் ஈடுபட்டதாக தமிழகம் முழு வதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 2,300 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி மாவட்டங்களில் 32 இடங் களில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 1,500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி யில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் 35 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 1,400 பேரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 30-க்கும் அதிக மான இடங்களில் மறியலில் ஈடு பட்ட 600 பேரும் கைது செய்யப் பட்டனர். திருப்பத்தூர், ராணிப்பேட் டையில் கடைகள் அடைக்கப்பட் டிருந்தன. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இந்த மாவட்டங்களில் 84 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டங்களில் 4,022 பேரும் ரயில் மறியலில் ஈடுபட்ட 110 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ் ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் 16 இடங்களில் மறியல் நடந்தது. இதில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர். மேட்டூரை அடுத்த கொளத்தூர் வழியாக கர்நாடகாவுக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. கர்நாடக பேருந்துகளும் தமிழகம் வர வில்லை. நாமக்கல் மாவட்டத் தில் 100 சதவீதம் லாரிகள் ஓடவில்லை.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவ கங்கை மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 2,919 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்குடியில் நடந்த போராட் டத்தில் காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் சஞ்சய் தத் பங்கேற்றார்.

உற்பத்தி பாதிப்பு

கோவையில் பெரும்பாலான கடைகள், தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. லாரிகள், சரக்கு வாகனங்கள் இயங்கவில்லை. திருப்பூரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்ன லாடை நிறுவனங்கள் மூடப்பட்ட தால், ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் முழு அடைப்பு

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பேருந்து, ஆட்டோ, டெம்போ இயங்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பந்த் போராட் டத்தின்போது இரு பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன. பிரதமர் மோடியின் உருவ பொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 480 பேர் கைதானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x