Published : 11 Sep 2018 08:06 AM
Last Updated : 11 Sep 2018 08:06 AM

சென்னை, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஐ.டி. சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: தமிழக அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கையில் தகவல்

சென்னை, கோவை, மதுரை உள் ளிட்ட 7 மாவட்டங்களில் 8 தக வல் தொழில்நுட்ப சிறப்பு பொரு ளாதார மண்டலங்கள் அமைக்கப் படும், தடையில்லா மின்சாரம், பதிவுக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று தமிழக தக வல் தொடர்பு தொழில்நுட்ப கொள் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய தகவல் தொடர்பு, தொழில்நுட்பக் கொள் கையை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார். அதை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.

தகவல் தொழில்நுட்பம் (ஐடி), தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (ஐடிஇஎஸ்) துறைகளில் அதிக முதலீட்டாளர்கள் விரும்பும் பகுதியாக தமிழகத்தை மாற்று வது, பெரிய அளவிலான வேலை வாய்ப்பை உருவாக்குவது, உலகத் தரம் வாய்ந்த மனிதவளத்தை உறுதி செய்வது, தமிழகத்தில் ஐடி தொழில் பிரிவினருக்கான வர்த்தகத்துக்கு இலகுவான சூழலை உருவாக்குவது போன் றவை இக்கொள்கையின் இலக்கு களாகும்.

குறிப்பாக ஐடி, ஐடிஇஎஸ் நிறுவனங்களுக்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், தமிழ் கணினி வளர்ச்சிக்கான வசதி களை ஏற்படுத்துதல், தென் மாவட் டங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்குதல் போன்றவை இந்த கொள்கையின் நோக்கங்களாகும்.

தொழில் பிரிவுக்குத் தேவை யான திறன்களை மாணவர்களுக்கு அளித்தல், ஐடி, ஐடிஇஎஸ் துறை யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், தொழில் முயற்சிக்கு உதவியாக இருத்தல், அனிமேஷன், டிஜிட்டல் விளை யாட்டு, சில்லறை வர்த்தகம், சுகாதார மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவர்களுக்கு விரிவான வாய்ப்புகளை உருவாக்கித் தருதல் போன்ற உத்திகளை இந்த கொள்கை கொண்டுள்ளது. இதில் அனிமேஷன், டிஜிட்டல் விளையாட்டு துறையில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை நகரங்களில் ஐடி சிறப்பு பொருளாதார மண்ட லங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னை - சோழிங்கநல்லூர், கோவை - விலான்குறிச்சி, மதுரை - இலந்தைகுளம் மற்றும் வடபழஞ்சி, திருச்சி - நாவல்பட்டு, நெல்லை - கங்கைகொண்டான், சேலம் - ஜாகீரம்மாபாளையம், ஓசூர்- விஸ்வநாதபுரம் ஆகிய 8 இடங்களில் எல்காட் சார்பில் ஐடி சிறப்பு பொருளாதார மண்ட லங்கள் உருவாக்கப்படும். இவற் றுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எல்காட் உருவாக்க உள்ளது.

சிறப்பு சலுகைகள்

சென்னை மற்றும் அதைச் சுற்றி யுள்ள 2-ம், 3-ம் நிலை நகரங்களில் ஐடி தொழில் மையங்களுக்காக, தேவையான கூடுதல் சாலை கட்டமைப்புகளை உருவாக்கி முதலீடுகளை அதிகரிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதவிர தடையில்லா மின்சாரம் வழங்கவும் 10 எம்விஏக்கு அதிக மான மின்சாரம் தேவைப்படுவோர், முழு கட்டணத்தை செலுத்தினால் பிரத்யேக மின் ஊட்டி (பீடர்) வழங்கவும் தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது.

ஐடி, ஐடிஇஎஸ் தொழில் பிரிவு களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய் யும் வகையில், கல்லூரி மாண வர்களுக்கு திறன் பயிற்சி வழங் கப்பட உள்ளது. புதிய தொழில் நுட்பம், ஆராய்ச்சி தொடர்பாக, கல்லூரிகளுடன் இணைந்து தொழில் நிறுவனங்கள் செயல் படுவதை தமிழக அரசு ஊக்கு விக்கிறது. வெளிநாட்டு மொழி அறிவுடன் திறன்வாய்ந்த மனித வளத்தை உருவாக்குவதுடன், சர்வதேச அளவில் வாய்ப்புகளை பெறவும் வழி ஏற்படுத்தப்பட உள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு சிறப்புச் சலுகைகளும் கொள்கையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக 50 தொழிலாளர்களைக் கொண்டு 3 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் நிறுவனங்கள் இந்த சலுகைகளைப் பெற தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவை போன்ற மேலும் பல சலுகைகள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கொள்கையில் இடம் பெற்றுள்ளன.

முத்திரைக் கட்டணம்

தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கொள்கையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஏ - வகை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் சி வகை, மற்ற மாவட்டங்கள் பி - வகை என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சி - வகை மாவட்டங்களில் ஐடி. ஐடிஇஎஸ் தொழில் நிறுவனங்கள் முதல்முறை நிலம் அல்லது கட்டிடம் வாங்கினால், அதற்கான முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதத்தை திரும்பப் பெறும் சலுகை அளிக்கப்படுகிறது. அடுத்த முறை வாங்கும்போது இந்த வசதி இல்லை.

பெண்களுக்கு சலுகை

பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கும் வகையில், சில வழிமுறைகளை உருவாக்கவும் இந்த தொழில்நுட்பக் கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலாளர் நலனை விட்டுக் கொடுக்காமல், தொழிலாளர் சட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளன. பணி நேரத்தில் நெகிழ்வுத்தன்மை, 3 ஷிப்டுகளாக பணி நேரம், இரவுப் பணியில் பெண்கள் நியமிக்கப்பட்டால், அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை, போதிய ஓய்வறை, பாதுகாப்பான பயணம், பெண் கண்காணிப்பாளர்கள் நியமனம் ஆகியவை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x