Published : 11 Sep 2018 07:59 AM
Last Updated : 11 Sep 2018 07:59 AM

உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக புகார்

உள்ளாட்சித் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறை இயக்குநரிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியி ருப்பதாவது:

உள்ளாட்சித் துறையின்கீழ் உள்ள சென்னை, கோவை உள் ளிட்ட அனைத்து மாநகராட்சி களிலும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவின்படிதான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் பினாமி நிறுவ னங்கள்தான் அவரது துறைக ளில் முழு ஆதிக்கம் செலுத்து கின்றன.

அதுமட்டுமின்றி, கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களையும் பெறுகின்றன. ரூ.86 லட்சம் அளவுக்கு மட்டுமே வணிகம் செய்த நிறுவனம், இவர் உள்ளாட்சித் துறை அமைச்சரான பிறகு, 28 கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் செய்யும் நிறுவனமாக மாறியிருக்கிறது. இன்னொரு நிறுவனம் 5 மடங்குக்குமேல், தனது வணிகத்தை ரூ.150 கோடி வரை அதிகரித்துள்ளது.

ரூ.149 கோடி மதிப்பிலான சென்னை ஸ்மார்ட் சிட்டி டெண்டர், ரூ.100 கோடி மதிப்பிலான 10 மாநகராட்சிகளின் ஸ்மார்ட் சிட்டி டெண்டர் ஆகியவை அமைச்சரின் உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரூ.942 கோடியை உபரி நிதியாக வைத்தி ருந்த சென்னை மாநகராட்சி, இன் றைக்கு ரூ.2,500 கோடி கடனில் மூழ்கியிருக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறை, சட்ட நெறிமுறை களைப் பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஊழல் புகாருக் குள்ளான அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் விளக்கம்

தன் மீதான புகார் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கெனவே அளித்துள்ள விளக்கத் தில், ‘‘எனது உறவினர்கள், நண்பர் கள் பல்வேறு தொழில்களில் ஈடு பட்டுள்ளனர். என்னுடன் இருக்கி றார்கள் என்பதாலேயே, அவர்கள் தொழில் செய்யக் கூடாது என்று சொல்வது சரியா?

என்னுடன் இருப்பவர்கள், உறவினர்கள் ஏதேனும் ஒப்பந்தப் புள்ளிகள் எடுத்திருந் தால், அதில் விதிமுறைகள் மீறப்பட்டி ருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர் பாக வெளியான செய்தியும் தவறு, அதில் இடம் பெற்றுள்ள புள்ளி விவரங்களும் தவறு. எனவே, இரண்டொரு நாளில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரு வேன்.” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x