Published : 09 Sep 2018 06:42 PM
Last Updated : 09 Sep 2018 06:42 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்விடு தலை செய்ய இந்திய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்கீழ் ஆளு நருக்கு பரிந்துரை செய்வது என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மே 21-ம் தேதி பெரும்பதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேரை தவிர மற்ற 19 பேரையும் விடுவித்தது.

2000-ம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனை யாக குறைக்கப்பட்டது. 2014-ல் மீதமுள்ள 6 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதனையடுத்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா தலைமை யிலான அரசு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது. இதனை எதிர்த்து மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, 7 பேரையும் விடுவிப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என தற்போதைய மத்திய பாஜக அரசும் தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுத்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என உத்தரவிட்டது.

இந்தச் சூழலில்தான் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர் களிடம் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச் சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக் குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற னர். பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன் றம், ‘‘அரசியலமைப்புச் சட்டம் 161-வது பிரிவின் கீழ் 7 பேரை யும் முன்விடுதலை செய்ய ஆளு நருக்கு தமிழக அரசு பரிந்துரைக் கலாம்'' என உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் தவிர மற்ற 6 நபர்களும் முன் விடுதலை செய்யுமாறு கோரி ஆளுநருக்கும் அரசுக்கும் மனு அளித்துள்ளனர். எனவே, இந்த 7 பேரையும் 161-வது பிரிவின் கீழ் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என தமிழக அமைச் சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இதன் அவசர முக்கியத் துவம் கருதி, இன்று அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை யின் இந்த பரிந்துரை உடனடியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அரசியல் சட்டப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இதில் ஆளுநர் தாமதம் செய்வதற்கான சூழ்நிலை இல்லை. அவர் விரைந்து முடிவெடுப்பார் என நம்புகிறோம். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணமாக உள்ளது. அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் அவர்களை விடுவிக்க 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையிலும் அமைச்சரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தோம்.

சமுதாய முன்னேற்றம், சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றுக்காக பாடுபட்ட தமிழகத்தின் முன்னோடி தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.

அதுபோல தமிழக மக்கள், தமிழ் மொழியை தன் உயிரினும் மேலாக நேசித்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என பெயர் சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரைக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அற்புதம்மாள் நன்றி

பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று நடந்த தமிழக அமைச் சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்குச் சென்ற பேரறிவா ளன் தாயார் அற்புதம்மாள் முதல்வர் கே.பழனிசாமிக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x