Published : 02 Sep 2018 12:31 PM
Last Updated : 02 Sep 2018 12:31 PM

2 நாள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் சீரடைந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று காலை அவர் வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துவந்த அவர், 31-ம் தேதி இரவு சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விரைவில் வீடு திரும்புவார். எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கட்சி அலுவலகம் தெரிவித்தது.

விஜயகாந்த் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்ட போது, ''அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை உள்ளது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக் கப்பட்டுள்ளார். தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறோம்'' என்றனர்.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றி தகவல் பரவுவதை அறிந்து அவரது மகன் விஜய் பிரபாகரன் வீடியோவில் உருக்கமாகப் பேசி, வலைதளத்தில் வெளியிட்டார். அதில், ''கேப்டன் மீண்டும் நீங்க எதிர்பார்க்கிற மாதிரியான பழைய பன்னீர் செல்வ மாக உங்கள் முன்பு வந்து நிற்பார். அதனால், தேவை யின்றி யாரும் அப்பாவை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம். அவரை நினைத்து பெருமைப்படுங்கள். அவர் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் திரும்ப வருவார். அமெரிக்காவில் முதல்கட்ட சிகிச்சை முடித்து வந்துவிட்டார். அடுத்த கட்ட சிகிச்சைக்கு 4 மாதத்தில் செல்ல இருக்கிறார். யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை முடிந்த நிலையில் அவர் இன்று காலை வீடு திரும்பினார்.

விஜயகாந்துக்குத் தேவையான உணவு முறைகள், உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x