Published : 02 Sep 2018 01:31 AM
Last Updated : 02 Sep 2018 01:31 AM

தரமற்ற, கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தமிழகம் முழுவதும் 2 ஆண்டுகளில் 4,312 புகார்கள் பதிவு: 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

தரமற்ற, கலப்பட உணவு பொருட் கள் விற்பனை செய்யப்படுவதாக தமிழகம் முழுவதும் 2 ஆண்டு களில் 4,312 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புகார்கள் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில்நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மாவட்ட உணவுப் பாதுகாப் புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலப்படம் நிறைந்த உணவு பொருட்கள், தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைத் தடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புத்  துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். கலப்படத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகின்றன.

வாட்ஸ் அப் எண்

இந்த நிலையில், கலப்படம், உணவு தரம் குறைவு உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்கஉணவுப் பாதுகாப்புத் துறையால் 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த எண்ணில் வாட்ஸ் அப் மூலமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.  2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 2,109 புகார்கள் பதிவாகிஉள்ளன.இந்த ஆண்டு  இதுவரை 2,203 புகார்கள் பொதுமக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் மொத்தம் 4,312 புகார்கள் பதிவாகியுள்ளன.

கலப்பட எண்ணெய்

இவற்றில், ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக அதிக புகார்கள் பதிவாகியுள்ளன. தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, தரம் குறைவான தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனை, கலப்பட எண்ணெய், தேநீர் விற்பனை உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.இவ்வாறு பெறப்படும் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு தகவல்

இதுகுறித்து, உணவுப் பாது காப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையின் உணவுப் பாதுகாப்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு, பதிவு செய்யப்படும் புகார்கள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.அதிகாரிகளும் கள ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்புகின்றனர். குற்

றம் நிருபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் புகார்கள்  மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். எனவே, புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுமக்களும் அதிக எண்ணிக்கையில்விழிப்புணர்வுடன் புகார் அளித்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x