Published : 29 Aug 2018 07:41 AM
Last Updated : 29 Aug 2018 07:41 AM

மதுரையில் வெறிச்சோடிய அழகிரி முகாம்: அமைதிப் பேரணி ஏற்பாடுகளில் சுணக்கம்

சென்னையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், மதுரையில் உள்ள மு.க.அழகிரியின் வீடு வெறிச் சோடிக் காணப்பட்டது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து வதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி அறிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தலைவ ராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அதேநேரம், மதுரையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். வெளியூர்களில் இருந்து ஆதர வாளர்கள் சிலர் மட்டுமே வந்திருந் ததால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கூறியதா வது: அழகிரி எதிர்பார்த்தவாறு திமுகவின் தற்போதைய நிர்வாகி கள் உட்பட முக்கியமானோர் யாரும் வரவில்லை. சென்னை பேரணி குறித்து அழகிரியிடம் கட்சியினர் உறுதி அளிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். திட்டமிட்டவாறு வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வரு வார்களா?, அழைத்து வரக் கூடியவர்கள் யாராக இருப்பார் கள்?, அவர்களின் போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளை யார் செய்வது? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் பலரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

அழகிரி தரப்பிலோ, அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலோ செலவுத் தொகை வழங்குவது குறித்து எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. ஏற்பாடு களில் உள்ள தேக்கநிலை அழகிரிக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. இன்னும் 3 நாட்களில், செப். முதல் தேதிக்கு பிறகே ஏற்பாடுகள் தொடர்பான உண்மை நிலை தெரியவரும் என்றனர்.

ஆர்வம் காட்டாத அழகிரி

திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. பொதுக்குழு தொடங்கிய சிறிது நேரத்தில் காலை 10.30 மணியளவில் மதுரையில் அழகிரி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு பந்தலில் காத்திருந்த ஆதரவாளர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பொதுக்குழு வின் எந்த நிகழ்வையும் டிவியில் பார்ப்பதற்குக்கூட அழகிரி ஆர்வம் காட்டவில்லை. ஸ்டாலின் பேசி முடித்து பொதுக்குழு கலைந்த பிறகே, பிற்பகல் 2 மணியளவில் அழகிரி மீண்டும் வீட்டுக்குள் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x