Published : 24 Aug 2018 11:32 AM
Last Updated : 24 Aug 2018 11:32 AM

குமாரபாளையத்தில் பாலத்தின் சுவரை உடைத்து கொண்டு காவிரி ஆற்றில் பாய்ந்த கன்டெய்னர் லாரி

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையத்தில் காவிரிப் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக நேற்று அதிகாலை சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று, பாலத்தின் 22-வது தூண் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு காவிரி ஆற்றில் பாய்ந்தது.

தகவல் அறிந்து வந்த குமாரபாளையம், பவானி தீயணைப்புத் துறையினர் பரிசலில் சென்று நீரில் மூழ்கி இருந்த லாரியை கயிறு மூலம் கட்டினர். பின்னர் 2 கிரேன்கள் மூலம் லாரி வெளியே எடுக்கப்பட்டது.

லாரியின் ஓட்டுநர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் திருச்சி பிமா நகர் தேவர் புது வீதியைச் சேர்ந்த சிவகுமார் (55) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “நேற்று அதிகாலை 2.30 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

இருட்டாக இருந்ததால் காலை 5 மணியில் இருந்துதான் மீட்புப்பணி தொடங்கியது. 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, காலை 10 மணியளவில் லாரி வெளியே கொண்டு வரப்பட்டது. ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபத்துநடந்திருக்கலாம்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x