Published : 24 Aug 2018 11:18 AM
Last Updated : 24 Aug 2018 11:18 AM

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு ஆளுநர், முதல்வர், ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். 17-ம் தேதி டெல்லியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தி கலசங்களில் சேகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நதிகள், கடல்களில் கரைப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர்களிடம் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, திருச்சி காவிரி, ஈரோடு பவானி கூடுதுறை, மதுரை வைகை, ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் ஆகிய 6 இடங்களில் கரைப்பதற்காக 6 கலசங்களில் வாஜ்பாயின் அஸ்தி நேற்று முன்தினம் சென்னை கொண்டு வரப்பட்டது.

தலைவர்கள் அஞ்சலி

தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு நேற்று காலை 6 மணி முதல் பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். காலை 8 மணிக்கு கமலாலயம் வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் உள்

ளிட்டோர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். காலை 9.30 மணிக்கு மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகல் 2 மணி அளவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி

யோர் வாஜ்பாய் அஸ்திக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழக

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலப்பொதுச்செயலாளர் வானதி சீனி வாசன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

மாலை 5 மணி அளவில் பாஜகஅலுவலகம் வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வாஜ்பாய் அஸ்திக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், விஎச்பி முன்னாள் தலைவர் எஸ்.வேதாந் தம், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே,  நடிகர் ராதாரவி, திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

26-ம் தேதி அஸ்தி கரைப்பு இதையடுத்து மாலையில் வாஜ்பாய் அஸ்தி 5 வாகனங்களில் வைக்கப்பட்டு திருச்சி, மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, பவானி ஆகிய ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்றும் நாளையும் பல ஊர்களில் வாஜ்பாய் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். 6 இடங்களிலும் 26-ம் தேதி ஒரே நேரத்தில் அஸ்தி கரைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x