Published : 24 Aug 2018 11:08 AM
Last Updated : 24 Aug 2018 11:08 AM

சுனில் பாலிவால், உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: 8 மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழகத்தில்  சுனில் பாலிவால், டி.உதயச்சந்திரன் உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று  பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறை (பாட திட்டம்) செயலர் டி.உதயச் சந்திரன், தொல்லியல் துறைஆணையராகவும், உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால்,

தொழிலாளர்  மற்றும் வேலை வாய்ப்பு துறை செயலராகவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் குமார் ஜெயந்த், கைத்தறி துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மின் நிதி மற்றும் உள்கட்ட மைப்பு மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலராகவும், குடிசைமாற்று வாரிய மேலாண் இயக்குநர் சம்பு கல்லோலிகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பு கல்லோலிகருக்கு கூடுதலாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் நசிமுத்தின், எரிசக்தி துறை செயலராகவும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர் ஜெனரல் டி.கே.ராமச்சந்திரன், இந்து சமய அறநிலையத் துறை செயலராகவும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண் இயக்குநர் சந்தோஷ் கே.மிஸ்ரா, மின்னாளுமை முகமை ஆணையர் மற்றும் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சந்தோஷ் பாபு, தகவல் தொழில்நுட்பத் துறை செயலராகவும், மாற்று திறனாளிகள் நலத்துறை ஆணையர் வி.அருண்ராய், தொழில்துறை கூடுதல் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வணிகவரித் துறை (நிர்வாகம்) இணை ஆணையர் பி.மகேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் நல ஆணையராகவும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர் மங்கத் ராம் ஷர்மா, உயர்கல்வித் துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார், திரு வள்ளூர் மாவட்டத்துக்கும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும், மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவ், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும்,  சென்னை மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன், கடலூர் மாவட்டத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், ஈரோடு மாவட்டத்துக்கும், ராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன், மதுரை மாவட்டத் துக்கும், அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர்ஜெ.ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்டத்துக்கும்,  அண்ணா மேலாண்மை நிலைய கூடுதல் இயக்குநர் ஏ.சண்முகசுந்தரம், சென்னை மாவட்டத்துக்கும் ஆட்சியர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இ.சுந்தரவல்லி, வணிகவரித் துறை (நிர்வாகம்) இணை ஆணையராகவும், கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.பி.தண்டபாணி, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜி.லதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணை செயலராகவும், மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குநர் ஆனி மேரி ஸ்வர்னா, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குநராகவும், கைத்தறி துறை செயலர் கே.பணீந்திரரெட்டி, அண்ணா மேலாண்மை மற்றும் பயிற்சி நிலைய இயக்குநர் ஜெனரலாகவும், பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை ஆணையர் அசோக் டாங்ரே, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநராகவும் நியமிக் கப்பட்டுள்ளனர்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் ஆர்.ஜெயா, சேமிக்கு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநராகவும், ஊரக நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும், தொழில்துறை சிறப்பு செயலர் எம்.எஸ்.சண்முகம், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராகவும், மின்னாளுமை முகமை மேலாண் இயக்குநர் ஆனந்தராவ் விஷ்ணு பாடீல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல்  தொழில்நுட்பத் துறைசெயலர் பி.சந்திரமோகன், கைவினை பொருட்கள் மேம்பாட் டுக் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை துணை செயலர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக செயல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x