Published : 18 Aug 2018 05:23 PM
Last Updated : 18 Aug 2018 05:23 PM

கேரளாவுக்கு 16 டன்கள் அரிசி அனுப்பி உதவிய தமிழக எம்.எல்.ஏ

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பலதரப்புகளிலிருந்தும் உதவி கோரி போராடி வரும் கேரளாவுக்கு கோவை மாவட்ட கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி 16,000 கிலோ அரிசியை நிவாரணமாக அனுப்பியுள்ளார்.

25 கிலோ அரிசி கொண்ட 640 மூட்டைகள் கொச்சிக்கு சிலபல துணிமணிகளுடன் வந்திறங்கின. கொச்சின் தமிழ்ச்சங்கம் ஆறுக்குட்டியைத் தொடர்பு கொண்டு நிலைமைகளை விளக்க ஆறுக்குட்டி உடனடியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

வந்த அரிசிமூட்டைகளையும் பிற உதவிப்பொருட்களையும் பெற்ற எர்ணாக்குளம் மாவட்ட கலெக்டர் கே.மொகமது ஒய்.சஃபிருல்லா மற்றும் சிறப்பு ஆபீசர் எம்.ஜி.ராஜமாணிக்யம் ஆகியோர் இடுக்கிக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

நிவாரணப்பொருட்களை அனுப்பும் போது தமிழ்ச்சங்கம் தலைவர் சி.சுகுமார், ஒருங்கிணைப்பாளார் பி.இந்திர சேகரன், செயலர் கே.வி.ரமேஷ், பொருளாளர் பி.கணபதி அகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x