Published : 18 Aug 2018 10:11 AM
Last Updated : 18 Aug 2018 10:11 AM

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர் குழு நியமனம்: அங்கிருந்தே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும் திட்டம்

இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3-வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட் டுள்ளது. அத்துடன் இஸ்ரோவின் லட்சியமாக கருதப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் புதிய ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வுகளையும் மேற்கண்ட வல்லுநர் குழு மேற்கொள்ளும். இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக் கப்பட வாய்ப்புகள் அதிகரித் திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண் ணில் செலுத்தப்படுகின்றன. 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால கோரிக்கை. இதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவின் விண்வெளித் துறை பேராசிரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர்குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்ததில் புவியியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டி லேயே மிகச் சிறந்த இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் என்பது தெரிய வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் குலசேகரப் பட்டினத்தில் 3-வது ஏவுதளம் அமைப்பது தள்ளிப்போனது.

இந்த சூழலில்தான், இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்றதும் இதுகுறித்த ஆலோசனைகள் தீவிரம் அடைந் தன. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

3-வது ஏவுதளம் எங்கு அமைய வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. ஆனால், புவியியல், பொருளாதாரம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பு ரீதியாக அதற்கேற்ற சிறந்த இடம் குலசேகரப் பட்டினம்தான். ஏனென்றால், உலகிலேயே ராக்கெட் ஏவுவ தற்கு மிக உகந்த இடம் பூமத்திய ரேகைக்கு 5 டிகிரியில் நெருக்கமான கோணத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானா. அடுத்தபடியாக, ஸ்ரீஹரி கோட்டா ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு 13.43 டிகிரியில் இருக் கிறது. ஆனால், குலசேகரப்பட்டி னமோ 8 டிகிரியில் இருக்கிறது.

தவிர, சர்வதேச விண்வெளி விதிமுறைகளின்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட் இன்னொரு நாட்டின் பரப்பு மீது பறக்கக் கூடாது. எனவே, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் அனைத்தும் இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளின் பரப்பு மீது பறப்பதைத் தவிர்க்க தென்கிழக்கு திசையில் ஏவப்பட்டு, அதன்பிறகு, கிழக்கு நோக்கி திருப்பப்படுகிறது. இதனால் ராக்கெட்டின் பயண தூரம் பல ஆயிரம் கி.மீ. அதிகரித்து, எரிபொருள் செலவும் கூடுதலாகிறது.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப் பட்டாலும், அதுவும் இந்த சுற்றுப்பாதையில்தான் செல்லும். இருப்பினும் பாதி வழியில் திசை திருப்ப முடியும் என்பதால் பயண தூரம் பலமடங்கு குறையும்.

பிஎஸ்எல்வி தொலைஉணர்வு செயற்கைக் கோள்களை ஏவுவதற் கான ராக்கெட்கள் 4 எரிபொருள் பேக்கேஜ்களை கொண்டிருக் கின்றன.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவும்போது, சுற்றுப்பாதையின் தூரம் குறை வதால் ஒரு பேக்கேஜ் எரிபொருள் தேவையில்லை. இதன்மூலம் ராக்கெட்டுடன் கூடுதலாக 600 கிலோ எடை வரை அனுப்பலாம். இதனால், இஸ்ரோவின் வணிகச் செயல்பாடுகளைக் கவனிக்கும் ‘ஆன்ட்ரிக்ஸ்’ நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். மேலும் 3-வது ஏவுதளம் மூலம் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக் கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ராக்கெட்டை தொலை இயக்கியால் (ரிமோட் கன்ட்ரோல்) இயக்கும் டிராக்கிங் மையத்தை சேலம் அல்லது ஈரோட்டில் அமைக்க வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேற்கண்ட திட்டத்துடன் இஸ் ரோவின் நீண்டகால லட்சிய மான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் இங்கிருந்தே செயல்படுத்துவதற் கான வாய்ப்புகளும் அதிகரித்துள் ளன. அதன் முதல் பகுதியாக, பூமியில் இருந்து சுமார் 1200 மைல் தொலைவு உயரத்தில் இருக்கும் ‘புவிமைய தாழ்வுயரச் சுற்றுப்பாதை’க்கு (Low Earth Orbit) மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த நிபுணர் குழு ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன்படி முதல் முயற்சியிலேயே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பாமல், விண்வெளிக்கு முன்னதாக அரைச் சுற்று வரை மனிதர்கள் சென்று திரும்புவார்கள்.

இந்த குழுவின் தலைவராக இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் சோமநாத் நியமிக்கப் பட்டுள்ளார். சதீஷ் தவான் விண் வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் பாண்டியன், உதவி இயக்குநர் மூர்த்தி, இஸ்ரோவின் தலைமை நிலைய இயக்குநர் லலிதாம்பிகா, விஞ்ஞானிகள் அழகுவேலு, ஐயப் பன், உன்னிகிருஷ்ணன் நாயர், கனங்கோ, அனுருப் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் குறித்தும் பேசிய விஞ்ஞானிகள், ‘‘ஒரு மனிதனைத் தாங்கும் விண்வெளி வாகனத்துக்கான ஏவுதளத்துக்கு என்னென்ன தேவை என்பதைப் பற்றிய முழுமையான ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொள்ளும். இதற்காக, குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பது தொடர் பாகவும், அங்கிருந்தே மனிதர் களை விண்வெளிக்கு அனுப்புவது தொடர்பாகவும் இந்தக் குழுவி னர் ஆராய்ச்சிகளை மேற்கொள் வார்கள்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x