Published : 18 Aug 2018 08:54 AM
Last Updated : 18 Aug 2018 08:54 AM

திமுக தலைவர் கருணாநிதியின் இலக்கிய இதழியல் குறித்த ஆய்வு தேவை: திருச்சியில் நடந்த புகழஞ்சலி நிகழ்வில் ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இலக்கிய இதழியல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ‘இந்து’ என்.ராம் தெரி வித்தார்.

‘கருத்துரிமை காத்தவர் கருணாநிதி’ என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாள ரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றார். இதில் ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

5 முறை முதல்வர், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என பல்வேறு சிறப்பு களைப் பெற்றவர் கருணாநிதி. அரசியலில் அவர் சாதித்ததை இனி இந்தியாவில் மட்டுமல்ல. உலகத்தில் யாரும் எட்டிப்பிடிப் பார்களா எனத் தெரியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, 11 மாநில முதல்வர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்ததில் இருந்து, அகில இந்திய அளவில் அவருக்கு இருந்த செல்வாக்கு தெரிகிறது.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூட இரங்கல் தெரிவித்திருந்தார். கருணாநிதிக்கும், ராஜபக்சேவுக் கும் நட்பும் இல்லை. உறவும் இல்லை. தமிழ் மக்களின் உரிமை கள் விஷயத்தில் இருவருக்கும் இடையே கடுமையான முரண்பாடு இருந்தது. ஆனாலும் ராஜபக்சே இரங்கல் தெரிவித்திருந்தார். யார், யாரெல்லாம் அவருடைய கருத்து களை எதிர்த்தார்களோ, அவர்கள் கூட மரியாதை செலுத்தியது மிக முக்கியமான விஷயம். பெருமை என்றுகூட கருதலாம்.

கருணாநிதி மிகச்சிறந்த உழைப் பாளி, படைப்பாளி, நிர்வாகி. தொட்ட துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தார். சிறுகதை, நாவல்,திரைக்கதை என அனைத் திலும் கோலோச்சினார். 1969-ம் ஆண்டிலிருந்து கருணாநிதியுடன் பழகி வருகிறேன். 45 ஆண்டு களுக்கும் மேலாக நன்றாக பழகி வந்தோம். அவரை எனது மூத்த நண்பராக, எழுத்தாளராக, அறிவுஜீவியாக கருதினேன். திராவிட இயக்கத்தில் 15-க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இருந்தன. அவற்றில் ‘முரசொலி’, ‘விடுதலை’ ஆகியவை இன்றும் உள்ளன.

எழுதுவதை அவர் வாழ்நாள் யோகாவாக மேற்கொண்டிருந்தார். தினமும் 6 மணி நேரம் எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். மாநில, தேசியம் மட்டுமின்றி சர்வதேச பிரச்சினைகள், அரசியல், வரலாறு, பொருளாதாரம், கலை என எல்லாவற்றையும் எழுதினார். நெருக்கடி காலத்தில் பல தந்திரங் களை கையாண்டார். கரிகாலன் என்ற பெயரில் எழுதினார். நெருக் கடி காலத்தில் தமிழ்நாடு மட்டும்தான், ஆட்சியில் இருந்த போதும் மத்திய அரசை எதிர்த் தது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தது. இது கருணாநிதியின் மிக முக்கியமான பங்களிப்பு. நெருக்கடி நிலையைக் கண்டு அவர் பயப்படவில்லை.

கருணாநிதி இலக்கிய இதழி யலைக் கையாண்டார். படிப்பதற்கு கடினமாக இருக்காது. அதேசமயம் முக்கியமான விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். வாசகர் களை ஈர்க்கக்கூடிய வகையில் இதழியல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எல்லா காலகட்டத்திலும் கருத்து சுதந்திரத்தை பாதுகாத்தார். கருணாநிதியின் இலக்கிய இதழியல் குறித்து திமுக ஆய்வு செய்ய வேண்டும். அவரது எழுத்து நடை, மையக்கருத்து, இதழியலுக்கான கடின உழைப்பு, தாக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அவர் மறைந்த பிறகு, இறுதி நேரத்தில் அரசு நிர்வாகம் செய்த சதி குறித்து இங்கு பேச விரும்பவில்லை. தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் சந்தித்து வரும் சவால்களைப் பற்றியும் இங்கு பேச விரும்பவில்லை. விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் இன்று அரசியலில் உள்ளனர். ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற அழகிய வார்த்தைகளை கொண்டு சேர்த்ததற்கு மு.க. ஸ்டாலினை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்’என்றார்.

நிகழ்வில் டெக்கான் கிரானிக் கல் ஆசிரியர் பகவான் சிங், ‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால், ஊடகவியலாளர் அருணன் உள்ளிட் டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், மாநிலங் களவை எம்.பி.கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பழநிமாணிக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திருச்சி சிவா எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x