Published : 18 Aug 2018 08:46 AM
Last Updated : 18 Aug 2018 08:46 AM

சென்னை பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் படத்துக்கு திமுக, மார்க்சிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி

சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வாஜ்பாய் உருவப் படத்துக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் டெல்லியில் நேற்று தகனம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பாஜகவினரும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலக மான கமலாலயத்தில் வாஜ்பாய் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை பாஜக அலுவலகத்துக்கு வந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி, மாநில அலுவலகச் செயலாளர் வெ.ராஜ சேகரன் உள்ளிட்டோர் வாஜ்பாய் உருவப் படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தமாகா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் பல்வேறு இடங் களில் பாஜகவினர் வாஜ்பாய் உருவப் படத்தை மலர்களால் அலங்கரித்து வைத்திருந்தனர். அதற்கு பாஜகவினர் மட்டுமல்லாது மாற்று கட்சியினரும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட செய்தியில், “முன்னாள் பிரதமரும், பாஜகவின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த அவர், அவசர நிலையின்போது ஜன நாயகத்தைக் காக்கப் போராடிய வர். குஜராத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டபோது ராஜ தர்மம் மீறப்பட்டுள்ளது என பகிரங்கமாக தனது அதிருப்தியை வெளிப் படுத்தியவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் வாஜ்பாய்’’ என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x