Published : 17 Aug 2018 09:20 PM
Last Updated : 17 Aug 2018 09:20 PM

அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி திடீர் மாற்றம்

வரும் 20-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ''வரும் 20 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்திவைக்கபட்டு, வருகின்ற 23-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.

செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு, தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகளும், தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x