Published : 13 Aug 2018 08:21 AM
Last Updated : 13 Aug 2018 08:21 AM

அழிந்துவரும் பூர்வீகக்குடி மக்களான தொதவர் இசை மொழி: ‘யுனெஸ்கோ’ தகவலால் வரலாற்று ஆர்வலர்கள் கவலை

தனித்துவமான மொழி, இசை, கலை, வழிபாடு என்ற பண்பாட்டு பெருமைகளைக் கொண்ட பூர்வீகக் குடி மக்களான தொதவர் பழங்குடி மக்களுடைய இசைமொழி மிக விரைவாக அழிந்துவரும் மொழி கள் பட்டியலில் இடம்பெற்றுள் ளதாக ‘யுனெஸ்கோ’ தெரிவித்துள் ளது.

நீலகிரி மலையின் உயர்ந்த முடிச்சுகளில் பூர்வீகக் குடிகளாக இருப்பவர்கள் தொதவர் பழங் குடிகள். இவர்கள் சுமார் 1,600 பேர் மட்டும் பேசக்கூடிய ‘தொத வம்’ என்ற மொழியைக் கொண்ட சிறு பழங்குடிகள் ஆவர். தொன் மையான பழக்க வழக்கங்களால் பிற இனத்தவர்களிடம் இருந்து ஒதுங்கியும் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்தும் வாழ்வதன் காரணமாக இவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களைக் கவர்ந்துள்ள னர்.

பெர்னாட் ஸ்கிட், வில்லியம் மார்சல், ஜி.யு.போப், வில்லியம் ரிவர்ஸ், எட்கர் தர்ஸ்டன், எமனோ, ஆந்தோணி வாக்கர் போன்ற மேலைநாட்டவர்களும் தருண் சோப்ரா, டெபோரா சுட்டன், சு.சக்திவேல், கே.ஏ.குணசேகரன், பக்தவச்சல பாரதி போன்ற இந்திய ஆய்வாளர்களும் தொதவர்களின் மொழி, இசை, கலை சார்ந்த வாழ்வியலை விரிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளனர். ஆய்வாளர்கள் இவர்களைத் ‘தோடா’ என்றே பதிவுசெய்துள்ள னர். எந்தத் தொதவரும் தம்மைத் ‘தோடா’ என்று சொல்லிக்கொள்வ தில்லை. மாறாகத் ‘தூதா’, ‘தொதவா’, ‘ஒள்’ என்றே குறிப்பிட் டுக் கொள்கின்றனர். தொதவர் என்பதற்குப் பொருள் ‘மக்கள்’ என்பதாகும். தொதவர்கள் சைவ உணவை மட்டுமே உண்பவர் கள். பெரும்பாலும் பால்சார்ந்த உணவுகளையே விரும்பி உண்ணு கின்றனர். உலகில் சைவ உணவை உண்ணும் பழங்குடிகள் தொதவர் களாக மட்டுமே இருக்க முடியும்.

இவர்களுடைய வீடு அமைப்பு வானவில் போன்று அரைவட்ட வடிவமானது. இவர்களது கோயில் களும் அப்படித்தான். நுழைவாயில் மிகமிகச் சிறியது. புலியைப் போலப் பதுங்கித்தான் உள்ளே செல்ல முடியும். தொதவர்கள் எளிதில் நுழைந்து வெளியே வந்துவிடு கிறார்கள். குளிரைத் தவிர்ப்பதற் கும் விலங்குகள் உள்நுழையாமல் தடுப்பதற்கும் இந்த ஏற்பாடாம். தொன்மை இசையின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள வேண்டு மானால் நாம் தொதவர்களைத்தான் நாட வேண்டும். அந்த அளவுக் கான இசைப் பாரம்பரியம் இவர் களுடையது. தொதவர் பழங்குடி ஆண்களும் பெண்களும் சிறுவர் களும் ஒழுங்குபடுத்தப்பட்ட சேர்ந் திசையைப்போல சுருதி பிசகாமல் பாடி அசத்துகிறார்கள். ஆண்கள் ஓங்கிக் குரல் எடுத்தும் நீட்டியும் பாட, பெண்கள் மென்மையாகவும் இனிமையாகவும் பாடுகின்றனர். தற்போது இவர்களுடைய இந்த இசை அழிவின் விளிம்பில் உள்ளது.

வரலாற்று ஆர்வலரும், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக் கழகம் தமிழ்த் துறை பேராசிரிய ருமான ஒ.முத்தையா கூறும்போது, ‘‘இயற்கை நேயம், தெய்வ வழிபாடு, உறவுகளின் இணக்கம், எருமை களின் புனிதம், உலகியல் சார்ந்த கற்பனைகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டது தொதவம் மொழி. வாய்மொழியாக மட்டுமே காலங்களை வென்று நிற்கும் ஒரு இசைமொழியும் கூட. எந்த இசைக்கருவியும் இவர்களின் புழக்கத்தில் இல்லை. குரலிசையே இவர்களது இசைப் பாரம்பரியம். தொதவர் இசைப் பாடல்களில் தமிழ்ச்சொற்களும் இயல்பாகக் கலந்து வருகின்றன.

மொழியியல் அறிஞர் எம்.பி.எமனோ தோடர்களின் மொழி, இசை, பண்பாட்டுச் செயல்பாடு களை ஆராய்வதில் அர்ப்பணிப் புடன் செயல்பட்டவர். இவர் தொத வர்களின் வாய்மொழிப் பாடல் களைப் பதிவுசெய்து, ‘தோடர் பாடல்கள்’ என்னும் ஆயிரம் பக்கங் கள் கொண்ட நூலை வெளியிட்டுள் ளார். இதில் தொதவர் பாடல்களை ஆட்டப் பாடல்கள், ஆண்கள் பாடும் பாடல்கள், பெண்கள் பாடும் பாடல்கள் என வகைப்படுத்தி அவற் றின் நுணுக்கங்களை, நுட்பங்களை மில்மன் பாரியின் வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டுடன் பொருத்தி ஆராய்ந்து வெளிப்படுத் தியுள்ளர். அண்மையில் சாகித்திய அகாடமியின் வாய்மொழி மற்றும் பழங்குடிகள் இலக்கிய மையம் ‘மாறும் உலகில் மாறா ஒலிகள்’ என்னும் தலைப்பில் தொதவர் வாய்மொழிப் பாடல்கள் (68), கதைகள் (30) தொகுப்பு ஒன்றினைத் தொதவர் சகோதரி வாசமல்லியின் உதவியுடன் நூலா கவும் குறுந்தகடாகவும் வெளியிட் டுள்ள முயற்சி பாராட்டுக்குரியது.

ஆங்கிலவழிக் கல்வி, இடம் பெயர்வுகள், மதமாற்றம், ஊடகத் தொடர்புகள், பண்பாட்டுக் கலப்பு போன்றவை நிகழ்வுகள் தொதவர் மொழியை, இசைமரபை அடை யாளம் இழக்கச்செய்து வருகின் றன. எதிலும் மாற்றங்கள் தேவை தான்.அதுவே ஒருமொழியின் அழி விற்கு அடிப்படையாய் அமைந்து விடக்கூடாது.

யுனெஸ்கோ அமைப்பு மிக விரைவாக அழிந்து வரும்மொழி, இனங்களில் தொதவர்களையும் பட்டியலிட்டுள்ளது. மிகப்பெரிய இந்த அழிவிலிருந்து தொதவர் பழங்குடியும் அவர்களது இசைமொழியும் பாதுகாக்கப்பட வேண்டும்.’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x