Published : 24 Jul 2018 09:11 AM
Last Updated : 24 Jul 2018 09:11 AM

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் டீசலில் ஓடும் ரயில்களுக்காக பிரத்யேக பெட்டிகள் தயாரிப்பு

மின்மயமாக்கல் செய்யாத வழித் தடங்களில் டீசலில் ஓடும் ரயில் களுக்கு தேவையான புதிய வகை ரயில் பெட்டிகள் பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை யில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-ல் (ரயில் இணைப்பு பெட்டி தொழிற் சாலை) பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் எல்எச்பி, சொகுசு, சரக்கு, மின்சார ரயில், மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக் கப்பட்டு வருகின்றன. இதுதவிர, மின்சாரம் இல்லாத வழித்தடங் களில் டீசலில் இயங்கும் ‘டெமு’ ரயில்களுக்கான அதிநவீன பெட்டி களும் தயாரிக்கப்பட்டு வருகின் றன.

இந்த புதிய வகை பெட்டியை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த மாதம் ஆய்வு செய்தார். பெட்டிகள் சிறப்பாக இருப்பதால், இந்த புதிய வகை பெட்டிகளின் உற்பத்தியை அதிக ரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்திய ரயில்வேயில் மட்டுமல்லாமல், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: ‘‘ரயில் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு புதிய வகை ரயில் பெட்டிகள் தயாரித்து வருகிறோம். அந்த வரிசையில் மின்மயமாக்கல் செய்யாமல் இருக்கும் ரயில் வழித்தடங்களில் இயக்கும் வகையில் டீசலில் ஓடும் புதிய வகை ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறோம். சுமார் 1 முதல் 3 மணி வரையில் பயணம் செய்ய இந்த பயணிகள் ரயில் வசதியாக இருக்கும். இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகளுடன் இன்ஜின் இருக்கும். மணிக்கு 80 முதல் 100 கிமீ வேகம் செல்ல முடியும்.

தற்போது ஒரு பெட்டி தயாரிக் கப்பட்டு மாடலுக்காக வைக்கப் பட்டுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் பார்வையிட்டார். 360 டிகிரியில் சுற்றும் ஃபேன், சொகுசான இருக்கைகள், கழிப்பறை வசதி, பெரிய வகை ஜன்னல்கள், மழை பெய்யும்போது கதவுகள் மூடினாலும் வெளியே தெரியும், பயணிகள் வசதியாக நிற்கவும் இடம் வசதி இருக்கும். 10 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் மதிப்பு ரூ.28 கோடி ஆகும்.

தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் வழிதடங்களில் இன்னும் மின்மய மாக்கல் செய்யாமல் இருக்கின் றன. இதுபோன்ற வழித்தடங்க ளில் இந்த புதிய வகை ரயில்களை இயக்கலாம். ரயில்வே வாரியத் தின் ஒதுக்கீடு படி, ரயில்வே மண் டலங்களுக்கு பெட்டிகளை நாங்கள் தயாரித்து வழங்குவோம். இது தவிர, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த பெட்டிகளை ஏற்றுமதி செய்யவுள் ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x