Published : 24 Jul 2018 08:03 AM
Last Updated : 24 Jul 2018 08:03 AM

திமுகவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாது: முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பதில்

திமுகவில் எந்த மாற்றமோ, திருப்புமுனையோ ஏற்படாது என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரி வித்தார்.

சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவராக நிய மிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன், தலைமைச் செய லகத்தில் பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் சீனிவாசன் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தி யாளர்களிடம் துரைமுருகன் கூறும் போது, ‘‘பொதுக்கணக்கு குழு தலை வராக என்னை நியமித்துள்ளனர். அடுத்த பொதுக்கணக்கு குழு கூட்டம் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதி களில் நடக்க உள்ளது. அதில் எந்தெந்த துறைகளின் கணக்கு களை எடுத்துக் கொள்வது என்பது குறித்து பேரவைத் தலைவர், பேரவை செயலாளருடன் ஆலோசித்தேன். கூட்டத்துக்கான நிகழ்ச்சிநிரல் தயாரிப்பது குறித் தும் தேவையான விளக்கங்கள் பெறுவது குறித்தும் விவாதித்தேன்’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த தாவது:

திமுக எம்எல்ஏக்களின் உயர்த் தப்பட்ட ஊதியம் நிலுவை யில் உள்ளதே, அதை எப்போது பெறுவார்கள்?

யாமறியேன் பராபரமே.

சிறந்த ஆட்சி நிர்வாகத்தில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளதாக தனியார் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதே?

மிகவும் மோசமான அரசாங்கம் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

திமுகவில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப் போவதாக கூறப்படுகிறதே, பொதுக்குழுவில் ஏதேனும் திருப்புமுனை ஏற்படுமா?

எங்கள் கட்சி சட்டதிட்டப்படி பொதுக்குழு கூடியாக வேண் டும். அதுவரை திமுகவில் எந்த மாற்றமும் வராது. எந்த திருப்பு முனையும் ஏற்படாது.

தீவிர அரசியலில் ஈடு படப் போவதாக மு.க.அழகிரி கூறியுள்ளாரே?

அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது

தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளதா?

எந்தத் தேர்தலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். சட்டப் பேரவை, நாடாளுமன்றம் அல்லது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தா லும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

வெற்றி வாய்ப்பில்லாமல் தேர்தலில் போட்டியிடுவோமா?

இவ்வாறு துரைமுருகன் பதி லளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x