Published : 24 Jul 2018 07:42 AM
Last Updated : 24 Jul 2018 07:42 AM

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி 100 சதவீதம் வரை உயர்வு: அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகள், வாடகை குடியிருப்பு கட்டிடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டிங்களுக்கான சொத்துவரி 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. அடுத்த அரையாண்டு முதல் (அக்டோபர் முதல்) இது அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஆகியவை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக குப்பைக்கும் வரி வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி என்பது, குடியிருப் பின் அளவு (சதுர அடி அடிப்படை யில்), வழங்கப்பட்டிருக்கும் வசதி மற்றும் அமைவிடத்தை பொறுத்து விதிக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை 12 லட்சம் பேர் குடியிருப்பு, குடியிருப்பு அல்லாத கட்டிடங்களின் பேரில் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.540 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டப் படுகிறது. இதே போல், மற்ற மாந கராட்சிகள், நகராட்சிகள், பேரூ ராட்சிகளிலும் அந்தந்த பகுதிக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப் பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்பட் டது. மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள சொத்து களுக்கான வரியை அப்போதைக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகள், நிர் ணயிக்கப்பட்ட விதிகள் அடிப்படை யில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை மாற்றி அமைத்தது. அதன்பின், கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத் துறையால் இந்த வரி மாற்றி அமைக்கப்படவில்லை.

இருப்பினும் நகராட்சிகள், பேரூ ராட்சிகள் அவ்வப்போது சொத்து, குடிநீர், கழிவுநீர் வரிகளை சிறிய அளவில் மாற்றி வந்தன. ஆனால், சென்னை மாநகராட்சி மட்டும் கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரியை மாற்றவில்லை. சென்னை மாநகராட்சியுடன் புதி தாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்ந்துள்ள நிலை யில், ஏற்கெனவே இருந்த பகுதி களில் குறைவாகவே வசூலிக்கப் பட்டு வந்தது. மேலும், மாநகராட்சி யின் பழைய பகுதிகளில் அதிக அளவில் சொத்து வரி நிலுவை இருப்பதும் வளர்ச்சிப் பணிகளை பாதிப்பதாக கூறப்பட்டது.

எனவே, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகியோர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறை செயலருக்கு கடிதம் எழுதினர்.

இதற்கிடையே, சென்னை நுங்கம்பாக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அதில் ஆலய வழிபாடு நடத்தி வரு வதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரைக் கொண்ட அமர்வில் கடந்த ஜூலை 17-ல் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பல்வேறு விஷயங் கள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘‘சென்னை மாநகராட்சிக்கான சொத்து வரியை மாற்றியமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக் கையை நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பரிசீலித்து 2 வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண் டும். சென்னையின் விரிவாக்கத் துக்கேற்ப சொத்து வரியை கடந்த 1998-க்குப் பிறகு மாற்றியமைக்க வில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று’’ என்று தெரிவித்து, வழக்கை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை மாற்றியமைக்க வேண்டிய கட் டாயம் ஏற்பட்டது. சென்னை மாநக ராட்சி ஆணையர் மற்றும் இதர மாநகராட்சிகளின் ஆணையர்கள், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூ ராட்சிகள் இயக்குநர் ஆகியோரின் கடிதங்கள் அடிப்படையில், நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை மாற்றுவதற்கான பரிந்துரை அளிக்கப்பட்டது.

இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி களில் உள்ள குடியிருப்பு கட்டிடங் களுக்கான வரி தற்போதுள்ள அள வில் இருந்து கூடுதலாக 50 சதவீதத் துக்கு மிகாமலும், வாடகை குடி யிருப்பு கட்டிடங்கள், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கான வரி தற்போதுள்ள அளவில் இருந்து கூடுதலாக 100 சதவீதத்துக்கு மிகாமலும் வசூலிக்கப்படலாம் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கவனமாக பரிசீலித்த தமிழக அரசு, பரிந்துரையின் அடிப் படையிலான வரி வசூலிப்பை உறுதி செய்ததுடன், இந்த நிதியாண்டின் அடுத்த அரையாண்டில் இருந்து (அக்டோபர் முதல்) வரி உயர்வை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள் ளது. மேலும், நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை பெருநக ராட்சி ஆணையர், பேரூராட்சிகள் இயக்குநர் ஆகியோர் அவர்களுக் கான தனி விதிமுறைகள் அடிப் படையில் புதிய வரியை அமல்படுத் தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அரசாணையை கடந்த 19-ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x