Published : 23 Jul 2018 08:19 AM
Last Updated : 23 Jul 2018 08:19 AM

ஸ்டாலினை விமர்சித்தால் மன்னிப்பே கிடையாது: மதிமுகவினருக்கு வைகோ எச்சரிக்கை

மு.க.ஸ்டாலினை விமர்சித்தால் மன்னிப்பே கிடையாது என மதிமுக தொண்டர்களுக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள் ளார்.

திருச்சியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

விடுதலைப்புலிகள் பெயரை யும், பிரபாகரன் பெயரையும் சொல்லி உண்மைக்கு மாறான செயல்களில், ஏமாற்று வேலைக ளில் ஈடுபட்டு உலக நாடுகளில் நிதி திரட்டுவோரை என்னால் சகிக்க முடியவில்லை. நான் யாரையும் பகையாளியாக, எதிராளியாக நினைக்கவில்லை. தமிழ் தேசியவாதிகள் எங்களுக்கு பகைவர்கள் அல்ல. அதிலுள்ள போலிகள்தான் எங்களுக்கு பகைவர்கள்.

விடுதலைப்புலிகளுக்கு வெளி யில் சொல்ல முடியாத பல உதவிகளை நானும், எனது மனைவியும் செய்திருக்கிறோம். அதைப்பற்றி இதுவரை எங்கும் சொன்னதில்லை. நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருப்பதால், அவற்றை என் சுயசரிதை நூலில் நிச்சயம் எழுதுவேன்.

மதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் சிலர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்து சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியதாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மு.க.ஸ்டா லினை விமர்சனம் செய்பவர், நிச்சயம் மதிமுக தொண்டராக இருக்க முடியாது. துரோகியாகவே கருத முடியும். திமுகவுக்கும், மதிமுகவுக்கும் இடையே கல கம் மூட்டலாம் என எவர் நினைத் தாலும், அது நடக்காது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மதிமுகவினருக்கு மன்னிப்பே கிடையாது. கட்சியிலும் இட மில்லை.

‘ஸ்டாலினை முதல் வராக்க போகிறேன்' என நான் பேசுவதற்கு சிலர் என்னிடம் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என அறிவுரை சொல்கின்றனர். இதை நான் சொல்லாமல் யார் சொல்வது? திமுக தலைவர் கருணாநிதிக்கு 29 ஆண்டுகள் கவசமாக, நிழலாக இருந்தேன். இனி ஸ்டாலினுக்கு அதேபோல இருப்பேன். இதை கருணாநிதியிடம் தெரிவித்த போது, அவர் மிகவும் மகிழ்ந்தார். மக்களவைத் தேர்தல் வரை திராவிட இயக்கத்துக்கு சோதனை யான காலம். இந்த காலத்தில் திமுகவின் பங்கு, கடமை அளப் பரியது. அவர்களுக்கு பக்கபல மாக மதிமுக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x