Published : 20 Jul 2018 10:49 AM
Last Updated : 20 Jul 2018 10:49 AM

உயர் நீதிமன்றத்தில் வழக்கு கட்டுகள் மாயம்: டிஜிட்டல் மயமே தீர்வு- சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு கருத்து

உயர் நீதிமன்றத்தில் 100-க் கும் மேற்பட்ட வழக்கு கட்டு கள் மாயமாகி இருப்பது தொடர் பாக சிபிஐ விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ள நிலையில், டிஜிட் டல் மயம்தான் இதற்கு ஒரே தீர்வு என உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பது என்பது 5 சதவீதம்தான். எஞ்சிய 95 சதவீத பணி, வழக்கு ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதுதான். ஒரு வழக்கு கட்டு ரெக்கார்டு ரூமில் இருந்து நீதிமன்ற அறைக்கு வருகிறது. அங்கு நீதிபதி உத்தரவுகளைச் சரிபார்த்ததும் அவரது உதவியாளரிடம் செல் கிறது. அதை உதவியாளர் சரி செய்த பிறகு, மீண்டும் கையெழுத் துக்காக நீதிபதியிடம் செல்கிறது. அங்கிருந்து காப்பிஸ்ட் எனப்படும் நகலகப் பிரிவுக்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து நகல்கள் அனுப்பும் டெஸ்பேட்ஜ் பிரிவுக்கு செல்லும். அதன்பிறகுதான் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அந்த பண்டல் செல்லும்.

உயர் நீதிமன்றத்தில் ஆங்கில ரெக்கார்டு ரூம், வெர்னாகுலர் ரெக் கார்டு என 2 பாதுகாப்பு அறைகள் உள்ளன. பழைய வழக்குகளின் கட்டுகள் என்றால் அதற்கு தனியாக அறை உள்ளது. இவ்வாறு கட்டுகள் ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கு செல்லும் போது அதை கண்காணிக்க ‘மூவ்மெண்ட் ரிஜிஸ்டரில்’ கண்டிப்பாக பதிய வேண்டும். அப்போதுதான் அந்த கட்டு எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

நீதிபதிகள் தங்களின் பணிச் சுமையை குறைக்க ஒரு வழக்கின் கட்டுகளை வீட்டுக்கு கொண்டுவரச் செய்தும் பணிபுரிய முடியும். அதற்கு சர்க்குலேஷன் என்று பெயர். அந்த கட்டுக்களை நீதிபதி சரிபார்த்து வழக்கு விசாரணைக்கு தயாரான பிறகு அந்த கட்டுகளை அலுவலக உதவியாளர் சரிபார்த்து வேனில் ஏற்றி பத்திரமாக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைப் பார். உயர் நீதிமன்றத்தில் அந்த கட்டுகளை ஓவர்சீயர் என்பவர் சரிபார்த்து அதை சம்பந்தப்பட்ட நீதிமன்ற அறைக்கு அனுப்பி வைப்பார்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிபதிகளின் வீ்ட்டுக்கு வந்து பணிபுரிவதற்கு அட்டாச்டு பிஏ-க் களும் உள்ளனர். இதுதவிர்த்து நீதிமன்றங்களில் ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்துக்கும் தனியாக பிஏ-க்கள் உள்ளனர். அனைத்து பண்டல்களையும் இந்த பிஏ-க்கள் தான் பராமரிப்பர். இப்படி வழக்கு கட்டுகள் பல இடங்களுக்கு செல்வதை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த மொத்த கட்டுகளுக்கும் பொறுப்பாளிகள் சம்பந்தப்பட்ட நீதிபதிகள்தான்.

கட்டுகள் மாயமாவதை தடுக்க ஒரே வழி நீதிமன்றத்தின் அன்றாடப் பணிகளை காகிதமற்ற டிஜிட்டல் மயமாக்குவதுதான். டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் முரளிதர் மற்றும் ரவீந்திரபட் ஆகிய இருவரது நீதிமன்றங்களும் பேப்பர்லெஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது. அங்கு எல்லா பணிகளும் டிஜிட்டல் கணினிமயமாக்கப்பட்டு பென்-டிரைவ், லேப்-டாப் மூலமாகத்தான் நடக்கிறது. இதேபோல ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள கீழமை நீதிமன்ற ஆவணங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

நான் எனது பணிக்காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித் துள்ளேன். ஒரு பண்டல்கூட காணாமல் போனதில்லை. ஒவ் வொரு நாளும் பட்டியல் வாங்கி அனைத்தையும் கண்காணிப்பேன். பியூன், வழக்கறிஞர்கள், அலுவலக ஊழியர்கள் யாரும் வழக்கு கட்டுகளை ஒளித்துவைக்க முடியாது. எனவே நீதிமன்றத்துக் கும், நீதிபதிகளுக்கும்தான் பொறுப்புணர்வு உள்ளது. உயர் நீதிமன்றத்தில் இருக்கும் கட்டுகள் காணாமல் போனால் அந்த கட்டு களை இருதரப்பிடமும் மீண்டும் பெற்று மறுகட்டமைப்பு செய்ய முடியும். ஆனால் கீழ்நீதிமன்ற கட்டுகள் மாயமானால் ஒன்றுமே செய்ய முடியாது.

தற்போது காணாமல்போன வழக்குகளின் கட்டுகள் எல்லாம் கீழ்நீதிமன்றத்தில் இருந்து வந்த குற்றவியல் வழக்குகள் சம்பந்தப் பட்டவை. ஒரு நீதிமன்றத்தி்ல் இருந்து மற்றொரு நீதிமன்றத்துக்கு மாறும்போதும் கட்டுகள் மாய மாக வாய்ப்புள்ளது.

சென்னையில் இருந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை பிரிந்தபோதும், சென்னை யில் இருந்து ஆந்திராவுக்கு உயர் நீதிமன்றம் பிரிந்தபோதும் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இதுபோல எத்தனை கட்டுகள் மாயமாகி உள்ளது என்பதை விசாரணையின்போது கண்டுபிடித்தால்தான் வெளியே தெரியும்.

அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலகட் டத்தில் டிஜிட்டல் மயமாக்கி கணினி மூலமாக ஆவணங் களைப் பதிவேற்றம் செய்தால் தான் இதுபோன்ற சிக்கலைத் தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x