Published : 20 Jul 2018 10:28 AM
Last Updated : 20 Jul 2018 10:28 AM

பள்ளிகளில் எதிர்பாராத விபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்- தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

பள்ளிகளில் எதிர்பாராத விபத்து கள் ஏற்படாத வண்ணம் தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று திருநெல்வேலியில் உள்ள தனி யார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கழிவறைகளைச் சுத்தம் செய்வதற் கான உபகரணங்கள் மற்றும் அவை தொடர்பான ரசாயன பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளிகளில் பாது காப்பு தொடர்பாக செய்ய வேண் டிய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து விரிவான அறிவுரை வழங்கப்பட்டும் திருநெல்வேலி பள்ளியில் தீ விபத்து சம்பவம் நேரிட்டுள்ளது. இது பள்ளி நிர் வாகத்தின் மெத்தனப்போக்கை யும், அலட்சியத்தையும் காட்டு கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்படாத வண் ணம் பள்ளி நிர்வாகத்தினர் பாது காப்புக்கு முன்னுரிமை அளித்து பின்வரும் அறிவுரைகளைப் பின் பற்றுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.

பள்ளிகளில் கழிவறைகளைச் சுத்தம் செய்வதற்கான உபகரணங் கள், அவை தொடர்பான ரசாயன பொருட்களை பள்ளி கட்டிடத்துக்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். ரசாயன பொருட்கள் மற்றும் வேதியியல் ஆய்வுக்கூடத்துக்கு தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் இருப்பு விவரத்தை பள்ளியின் முதல்வர் வாரம் ஒருமுறை பதி வேட்டில் சரிபார்த்து அப்பொருட் கள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண் டும். வகுப்பறைக்கு அருகில் ரசாயன மூலப்பொருட்களை வைக்கக் கூடாது

வேதியியல் ஆய்வகத்துக்கு காஸ் இணைப்பு அளிக்கப்பட்டி ருந்தால், காஸ் சிலிண்டரை ஆய் வகத்துக்கு வெளியே பாதுகாப் பாக வைத்திருக்க வேண்டும். கழிவறைகளைச் சுத்தம் செய்யும் மூலப்பொருட்களை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை முறையாக மூடி அதைப் பூட்டியிருக்க வேண்டும்.

மின்இணைப்பை பராமரித்து அதை மாணவர்கள் அணுகாதவாறு பாதுகாப்பான முறையில் மூடி வைத்திருக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் காய்ந்த அல்லது பட்டுப்போன மரங்கள் இருந்தால் அவற்றை உரிய அனுமதி பெற்று உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x