Published : 17 Jul 2018 09:44 AM
Last Updated : 17 Jul 2018 09:44 AM

ஸ்டெர்லைட்  ஆலையை  மீண்டும்  திறக்க  வேண்டும்: லாரி உரிமையாளர்கள், சிறு, குறு தொழிலாளர்கள் மனு

தூத்துக்குடி  ஸ்டெர்லைட்   ஆலையை   மீண்டும்   திறக்க கோரி  லாரி  உரிமையாளர்கள்  மற்றும்  அதனை சார்ந்த சிறு, குறு தொழிலாளர்கள் நேற்று   ஆட்சியரிடம்  மனு அளித்தனர்.

தூத்துக்குடியில் கடந்த  மே 22-ம்  தேதி நடைபெற்ற  ஸ்டெர்லைட்  எதிர்ப்பு போராட்டம்  வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கிச்  சூட்டில்  13  பேர்  உயிரிழந்தனர்.  இதனைத்  தொடர்ந்து  ஸ்டெர் லைட்  ஆலையை  நிரந்தரமாக மூட  தமிழக அரசு  மே 28-ம்  தேதி அரசாணை பிறப்பித்தது.  அதன்பேரில்  ஆலையை அதிகாரி கள் மூடி சீல் வைத்தனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை  மீண்டும்  திறக்க  வேண் டும் என  பல்வேறு தரப்பினரிடம்  இருந்தும் கடந்த சில வாரங்களாக கோரிக்கைகள் எழுந்து வரு கிறது.  ஒப்பந்தகாரர்கள், ஒப் பந்த  தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரும்  இது தொடர்பாக  அமைச்சர்,   ஆட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து  மனு அளித்து வருகின்றனர்.

நேற்று  லாரி  உரிமையாளர்கள்  மற்றும் அதனைச் சார்ந்த   சிறு, குறு  தொழிலாளர்கள்  தூத்துக்குடி  ஆட்சியர் அலுவலகத்துக்கு  வந்தனர். அவர்கள்  ஆட்சியர்  சந்தீப் நந்தூரியை  சந்தித்து  அளித்த மனு விவரம்:

தூத்துக்குடி நகரில் பல ஆண்டுகளாக  டிரான்ஸ்போர்ட்  தொழில் மற்றும்  அதனைச் சார்ந்த  சிறு, குறு தொழில்கள் செய்து வருகிறோம்.   ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  லாரிகள்,  டேங்கர்  லாரிகள்   தினமும்  தாமிர தாது, ராக் பாஸ்பேட்,  நிலக்கரி,  தாது மணல் ஆகியவற்றை   ஸ்டெர்லைட்  ஆலைக்கு  கையாள  பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் மூலம்  சுமார் 15 ஆயிரம் பேர் பயனடைந்து வந்தோம்.

இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக  மூட  தமிழக  அரசு அரசாணை பிறப் பித்தது.  இதன் விளைவாக  டிரான்ஸ்போர்ட்  நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த பல  சிறு, குறு தொழில்கள் நலி வடைய தொடங்கியுள்ளன.   நாங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளோம். அதிக கடன் சுமை காரணமாக வாகனங்கள் மற்றும் சொத்துகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, மாட்ட ஆட்சியர் எங் கள் மனுவை ஏற்றுக்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட   நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x