Published : 10 Jul 2018 08:08 PM
Last Updated : 10 Jul 2018 08:08 PM

பெண்களுக்காகப் பணியாற்றிய சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெண்கள் முன்னேற்றத்துக்கு பணியாற்றிய சமூக சேவகர், தொண்டு நிறுவனத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சமூக நலத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''2018-ம் ஆண்ட சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் முதல்வரால் வழங்கப்பட உள்ளது. குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நி்ரவாகம் போன்ற தறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றி வரும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருக்க வேண்டும். சமூக சேவகர் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநில அளவிலான உயர்மட்டக்குழு விண்ணப்பங்களை பரிசீலித்து விருதுக்கு தகுதியான தனி நபர் மற்றும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் அனுப்பப்பட வேண்டும். மாதிரி விண்ணப்பம், இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் ஆகியவை ‘tnsocialwelfare.org’ என்ற இணையதள முகவரியில் காணலாம். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றம் தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகி வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்கவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x