Published : 09 Jul 2018 09:16 AM
Last Updated : 09 Jul 2018 09:16 AM

டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்பு: அதிமுக தலைமை எச்சரிக்கை

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிமுக அதிகாரப்பூர்வ செய் தித் தொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் கட்சி சார்பில் கருத்து தெரிவித்தால் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிமுகவின் கருத்துகளை எடுத்துரைப்பதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோ ரால் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மட்டுமே தொலைக்காட்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சியின் கருத்துகளை தெரிவிப்பார்கள். இது தொடர்பாக ஊடகங் களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, அதிமுகவைச் சேர்ந்தவர்கள், தோழமை கட்சியினர் என்பது போன்ற அடையாளங்களை கூறிக்கொண்டு சிலர் தொலைக்காட்சிகளில் கூறிவரும் கருத்துகள் அதிமுகவின் கருத்துகள் அல்ல.

அவ்வாறு ஓர் அடையாளத்தை கூறிக்கொண்டு தங்கள் கருத்துகளை கட்சியின் கொள்கை நிலைப்பாடாக எடுத்துரைக்க எந்தவொரு நபருக்கும் அனுமதியோ ஒப்புதலோ தரப் படவில்லை.

ஒழுங்கு நடவடிக்கை

அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்கள் மட்டுமே கட்சியின் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். இதையும் மீறி கட்சியின் கருத்து என ஊடக விவாதங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி ஊடகங்கள் இதுபோன்ற நபர்களை அதிமுகவினர் என குறிப்பிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். ஊடகத் தினரும் அதிமுக அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x