Published : 09 Jul 2018 08:06 AM
Last Updated : 09 Jul 2018 08:06 AM

பள்ளி மாணவருக்கு சிஏ குறித்து பயிற்சி அமைச்சர் தகவல்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 20,000 மாணவர்களுக்கு 500 தணிக்கையாளர்கள் மூலம் சி.ஏ. படிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக முதல் கட்டமாக ஈரோட்டில் 2,700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 12 வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும். நீட் தேர்வுக்கு 412 மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நாட்களில் ஒரு மணி நேரமும் மற்றும் விடுமுறை நாட்களில் 3 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x