Published : 09 Jul 2018 07:37 AM
Last Updated : 09 Jul 2018 07:37 AM

பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகை: மக்களவை தேர்தல் குறித்து ஆலோசனை

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத் தில் 5 வாக்குச் சாவடிகளை ஒரு சக்தி கேந்திரமாகவும் 6 சக்தி கேந்திரங்கள் மகா சக்தி கேந்திரமாகவும் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

சக்தி கேந்திர பொறுப்பாளர்களாக 13,056 பேரும் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களாக 2,750 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக அமித் ஷா இன்று சென்னை வருகிறார். காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவர், பின்னர்விஜிபி தங்க கடற்கரை வளாகத்துக்கு 12 மணிக்கு செல்கிறார். அங்கு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவோடு மதியம் 2 மணி வரை ஆலோசனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து, தமிழகம், அந்தமான், புதுச்சேரியைச் சேர்ந்த பொறுப்பாளர்களை பிற்பகலில் சந்திக்கிறார். மாலை 4.30 முதல் 5.30 வரை ஆர்எஸ்எஸ், விஎச்பி, இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை சக்தி கேந்திரம், மகாசக்தி கேந் திர பொறுப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது. இன்றிரவு சென்னையில் தங்கும் அவர், நாளை காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ‘‘அமித் ஷாவின் வருகையால் தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களும் ஒரே இடத்தில் கூடுவது தமிழகத்தில் இதுதான் முதல் முறை.

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தெல்லாம் இந்தக் கூட்டத் தில் எந்த ஆலோசனையும் நடைபெறாது. முக்கிய நபர்கள் சந்திப்பும் இல்லை. முற்றிலும் அமைப்பு ரீதியாக, வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவைதயார்படுத்தும் நிகழ்வாகவே அமித் ஷா பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது’’ என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x