Published : 30 Jun 2018 09:09 PM
Last Updated : 30 Jun 2018 09:09 PM

நான் மிகவும் விரும்பும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன் ட்விட் பதிவு

ட்விட்டரில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தான் மிகவும் விரும்பும் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் #AskKamalHaasan@ikamalhaasan கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறார். அதிக கேள்விகள் உள்ளதால் இன்று பிக்பாஸ் ஷூட்டிங்கின் இடையிடையே பதிலளிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சில கேள்விகள் அவர் பதிலளித்ததில் சுவாரஸ்யமாக இருந்தது. அவை பற்றிய தொகுப்பு:

தமிழ் கலைமகன் என்பவர் கமலிடம் நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்று கேட்டதற்கு நல்ல நூல்களை பற்றி மேற்கோள் காட்டாமல் பூணூலைப்பற்றி கமல் பதிலளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கமலின் பதில் “நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்.” என பதிவிட்டுள்ளார்.

பத்ரி நாராயணன் என்பவர் நீங்கள் எப்போதாவது உலகப்புகழ் பெற்ற சத்யஜித்ரே, ஷியாம் பெனகல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றாமல் போனது குறித்து வருந்தியுள்ளீர்களா? உங்களை சத்யஜித்ரே ஒரு படத்தில் நடிக்க அழைத்ததாக அறிந்தேன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் “துரதிருஷ்டவசமாக இருவருமே என்னை அழைக்கவில்லை, தனிப்பட்ட முறையில் அவர்களை எனக்கு தெரியும், ஆனால் தற்போது காலங்கடந்து விட்டது. சத்யஜித்ரே மறைந்துவிட்டார், நானும் வருங்காலத்தில் படத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிரா என்பவர் அதிக அளவில் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் தமைழகத்தில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன, சமீபத்தில்கூட ஒரு லாரியை பிடித்தார்கள், நீங்கள் இது குறித்து உங்கள் நண்பர் கேரள முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச்சென்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே? என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் இதுகுறித்து நண்பர் கேரள முதல்வரிடம் ஏற்கெனவே பேசியுள்ளேன், இனியும் பேசுகிறேன். இரண்டு மாநிலங்களும்சேர்ந்து இதற்கான தீர்வை கண்டுபிடிப்போம் என்று பதிலளித்துள்ளார்.

அடுத்து சசிகுமார் என்பவர் “உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.” என்று பதிலளித்துள்ளார்.

ரஜினி கமலுக்கு அடுத்து பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் அரசியலில் குதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். அப்படி குதித்தால் பலத்த போட்டியாளராக விளங்குவார் என்ற நிலையில் வரவேற்று கமல் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது அரசியல் நாகரீகத்தை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது.

இதே போல் ட்விட்டரில் பலரும் ஏகப்பட்ட கேள்விகளை கமலை நோக்கி கேட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x