Published : 29 Jun 2018 12:19 PM
Last Updated : 29 Jun 2018 12:19 PM

‘தி இந்து’ தமிழ், சாய்ராம் கல்வி குழுமம் சார்பில் பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு குறித்து சென்னையில் நாளை வழிகாட்டி கருத்தரங்கம்- அண்ணா பல்கலையில் நடக்கிறது; மாணவர்கள், பெற்றோர் பங்கேற்கலாம்

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் சாய்ராம் கல்விக் குழுமம் சார்பில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு குறித்த ஆலோசனைக் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (30-ம் தேதி) நடை பெறுகிறது.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், சாய்ராம் கல்விக் குழுமமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற பெயரில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் சிறப்பு வழிகாட்டி கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன.

இதுவரை மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, சேலம், கோவை ஆகிய நகரங்களில் இந்தக் கருத்தரங்குகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு அப்பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், பெற்றோரும் பெரிதும் பயன் அடைந்தனர்.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த வழிகாட்டி கருத்தரங்கம் சென்னையில் நாளை (ஜூன் 30) சனிக்கிழமை நடக்க உள்ளது. கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கில் இந்தக் கருத்தரங்கம் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடக்கிறது. இதில், பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை மாணவர்கள் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

ஆலோசனைகள்

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் உட்பட அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், கல்வி ஆலோசகர்கள் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் வெ.இறையன்பு, ரயில்வே கூடுதல் டிஜிபி சி.சைலேந்திரபாபு, ‘மாற்றம்’ ஃபவுண்டேஷன் நிறுவனர் சுஜித்குமார் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெறு கின்றன.

கலந்துகொள்ள..

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களை பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் செல்போன் எண்ணில் UUKCN என்று குறிப்பிட்டு சிறு இடைவெளி விட்டு பெயர், வயது, இடம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆண்டு ஆகிய விவரங்களை ஒவ்வொன்றுக்கும் சிறு இடைவெளி விட்டு குறிப்பிட்டு 8082807690 என்ற செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பினால் போதும்.

தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற இந்த வழிகாட்டிக் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக் கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x