Published : 23 Jun 2018 09:59 AM
Last Updated : 23 Jun 2018 09:59 AM

சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை இடையே ரயில்பாதை பராமரிப்புப் பணிகளால் 2 நாளில் 18 மின்சார ரயில்களின் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை இடையே ரயில்பாதை பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளதால், இன்றும், நாளையும் மொத்தம் 18 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளச்சேரி - ஆவடிக்கு 10.15, வேளச்சேரி - திருவள்ளூர் மதியம் 12.15, வேளச்சேரி - பட்டாபிராமுக்கு மதியம் 12.55, சென்ட்ரல் - ஆவடிக்கு மதியம் 12.35, திருவள்ளூருக்கு காலை 9.30, ஆவடி - வேளச்சேரிக்கு மதியம் 2.40 மணி, திருவள்ளூர் - சென்ட்ரலுக்கு மதியம் 2.40, ஆவடி - கடற்கரை மதியம் 1.35, திருவள்ளூர் - வேளச்சேரிக்கு காலை 11.05 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் - வேளச்சேரிக்கு மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். ஆவடியில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு மதியம் 2.20 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரை - ஆவடிக்கு காலை 11.10, திருவள்ளூருக்கு மதியம் 1.05, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு மதியம் 1.50 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்களும், சென்ட்ரல் - ஆவடிக்கு மதியம் 12.35, திருவள்ளூருக்கு காலை 9.30 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடி - சென்னை கடற்கரைக்கு மதியம் 2.40, திருவள்ளூர் - சென்ட்ரல் மதியம் 2.40, ஆவடி - கடற்கரைக்கு மதியம் 1.35, திருவள்ளூர் - கடற்கரைக்கு காலை 11.05 மணி மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கிடையே, ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்க்கு மதியம் 2.20 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x