Published : 10 Jun 2018 09:57 AM
Last Updated : 10 Jun 2018 09:57 AM

சிறப்பு, அடுக்குமாடி கட்டிடத்துக்கான வளர்ச்சி கட்டணம் உயர்வு: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு

சென்னையில் உள்ள சிறப்பு மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்கான கட்டமைப்பு வளர்ச்சிக் கட்டணத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உயர்த்தியுள்ளது.

சென்னையில் 3 தளங்கள் வரையிலான அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மாநகராட்சியே அனுமதி வழங்குகிறது. அதற்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், 4 தளங்கள் கொண்ட சிறப்பு கட்டிடங்கள், தொகுப்பு கட்டிடங்களுக்கு திட்ட அனுமதியை சிஎம்டிஏ வழங்குகிறது.

திட்ட அனுமதி பெற விண்ணப்பிப்பவர்கள், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கட்டணம்(ஐடிசி) செலுத்த வேண்டும். முன்பு இக்கட்டணம் ஒரு சதுரமீட்டருக்கு ரூ.121 ஆக இருந்தது. கடந்த ஏப்ரல் 1 முதல், இதைரூ.148 ஆக சிஎம்டிஏ உயர்த்தியுள்ளது. இது அடுத்த மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

திட்ட அனுமதியில் மாற்றம்

மேலும், சிஎம்டிஏவில், திட்ட அனுமதி அளிப்பதில் தாமதத்தை தடுக்க, அனுமதி அளிப்பதற்கான அதிகாரிகள் நிலையில் சில மாற்றங்களையும், உறுப்பினர் செய லர் ராஜேஷ் லக்கானி செய்துள்ளார்.

அதாவது, சிறப்பு கட்டிடங்கள், குடியிருப்பு மற்றும் வர்த்தக அடிப்படையிலான தொகுப்பு கட்டிடங்களுக்கான அனுமதியானது இதற்கு முன்னர், உறுப்பினர் செயலரே வழங்கும் வகையில் இருந்தது. இது தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இக்கட்டிடங்களில் 1,000 சதுர மீட்டருக்கு உட்பட்ட கட்டிடங்களுக்கு முதுநிலை பிளானர் அல் லது தலைமை பிளானரே அனு மதி அளிக்கலாம். அதற்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு, அதற் கான ஆவணங்களை முதுநிலை பிளானர் அல்லது தலைமை பிளானர் வழியாக உறுப்பினர் செயலருக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 30 நாட்களுக்குள் அந்தக் கட்டிட திட்ட அனுமதியை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த அனுமதி கோரிக்கையை உறுப்பினர் செயலருக்கு தகுந்த காரணங்களைத் தெரிவித்து அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்ட அனுமதி அளித்தது தொடர்பான அறிக்கையை திங்கள்கிழமைதோறும் உறுப்பினர் செயலருக்கு முதுநிலை பிளானர் மற்றும் தலைமை பிளானர் அனுப்ப வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x