Published : 10 Jun 2018 08:40 AM
Last Updated : 10 Jun 2018 08:40 AM

2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

நடப்பாண்டில் 2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ‘திறன்மிகு தமிழகம்’ என்ற தலைப்பில் மாநில திறன் மாநாடு - 2018 கிண்டியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத் தத் துறை அமைச்சர் டி. ஜெயக் குமார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

இந்த விழாவில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும்போது, “இன்றைய சூழலில் தொழில் முனைவோருக்கான அனைத்து வாய்ப்புகளும் தயாராக உள்ளன. முன்னர் இந்த நிலை கிடையாது. எனவே இருக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு பயிற்சி அளிப்போரும் அரசின் நோக்கங்களை உணர்ந்து செயல்பட வேண்டும். சிறந்த தொழில் முனைவோரை உருவாக்குவதுடன் அவர்களது வேலைவாய்ப்பு, சுய முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்” என்றார்.

அமைச்சர் நிலோபர் கபீல் பேசும்போது, ‘உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. அதிகம் படித்தவர்கள் இங்கு உள்ளனர். கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க அவர்களது திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் 4.8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2018 - 19-ம் ஆண்டில் 2 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்ட மிடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x