Published : 10 Jun 2018 08:38 AM
Last Updated : 10 Jun 2018 08:38 AM

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கு விண்ணப்பம் நாளை விநியோகம்: நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) தேர்வு அடைப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள், தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 19

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்கு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு வரும் 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து் கொள்ளலாம்.

கலந்தாய்வு ஜூலை 1

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையும் நடக்க உள்ளது.

70 ஆயிரம் விண்ணப்பங்கள்

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைச் செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறுகையில், “அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 45 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அரசு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என இரண்டுக்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனி விண்ணப்பத்தை வாங்கி விண்ணப்பிக்க வேண் டும்” என்றார்.

அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை www.mcc.nic.in இணையதளத்தில் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x