Published : 02 Jun 2018 09:34 AM
Last Updated : 02 Jun 2018 09:34 AM

கை, கால்களை முடக்கும் முடக்குவாத நோயால் பெண்கள் அதிகம் பாதிப்பு: சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவ நிபுணர் ஆர்.ரவிச்சந்திரன் தகவல்

கை, கால்களை முடக்கும் முடக்குவாத நோயால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சென்னை அரசு பொது மருத்துவமனை மூட்டு, தசை, இணைப்புத் திசு துறை இயக்கு நர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் - டாக்டர்கள் இடையே சுமுக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் முடக்குவாத நோய்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூட்டு, தசை, இணைப்புத் திசு துறை இயக்குநர் டாக்டர் ஆர். ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் முடக்குவாத நோய் குறித்த பொதுமக்களின் கேள்விகளுக்கு அத்துறையின் டாக்டர் கள் விளக்கமாக பதில் அளித்த னர்.

100 பேரில் ஒருவர்

இந்நிகழ்ச்சியில் மூட்டு, தசை, இணைப்புத் திசு துறை இயக்கு நர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:

ரூமட்டாய்டு என்பதே முடக்குவாதம். இது பரம்பரையாக வரும் நோய் இல்லை. இந்த நோய் கை, கால்களின் மூட்டுகளை முடக்கி நடக்க முடியாமல் செய்துவிடும். இதயம், நுரையீரல், சிறுநீரகங்களையும் பாதிக்கும். 100 பேரில் ஒருவர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோயால் ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் முடக்குவாதத்தால் அதிகம் பாதிக்கப்படு கின்றனர்.

கை, கால்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய இணைப்புகளில் வலி, வீக்கம் போன்றவை முடக்குவாதத்தின் அறிகுறிகளாகும். தொடர்ந்து 6 வாரத்துக்கு மேல் வலி, வீக்கம் இருந்தால் உடனடி யாக முடக்குவாத சிகிச்சை நிபுணரைப் பார்த்து சிகிச்சைப் பெற வேண்டும். இந்த நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சைப் பெற் றால் நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

செம்முருடு என்ற லூபஸ் நோய்

இதேபோல் முதுகெலும்பு முடக்குவாதம், லூபஸ், ரத்தக்குழாய் முடக்குவாதம், கீல்வாதம், தோல் இறுக்கி போன்றவைகளும் முடக்குவாத நோய்களு டன் தொடர்புடையவையாகும். முதுகெலும்பு முடக்குவாதம் முதுகு தண்டுவடம், கால்களின் மூட்டுகளைப் பாதிக்கிறது. இந்த நோய் பரம்பரை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரு கிறது. செம்முருடு என்ற லூபஸ் நோய் பெண்களைக் குறிப்பாக இளம் பெண்களைத் தாக்கு கிறது. இதனால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். கை, கால்களின் தோல் மற்றும் முகத்தின் தோல் பாதிக்கப்படலாம். கை விரல்கள் நிறம் மாறும்.

ரத்தக்குழாய் முடக்குவாதம், தொடர் வேலையின் போது ஏற்படும் அயர்ச்சி, ரத்தக்குழாய் அடைப்பு போன்றவைகளால் இந்நோய் வரலாம். சில நேரங்களில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. கீல்வாத நோய் உப்பு சத்து உடம்பில் அதிகமாவதால் வருகிறது.

இவ்வாறு டாக்டர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x