Published : 02 Jun 2018 07:59 AM
Last Updated : 02 Jun 2018 07:59 AM
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 7 கூடுதல் நீதிபதிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 75. இதில் தற்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்த்து மொத்தம் 56 நீதிபதிகள் உள்ளனர். இந்நிலையில் புதிதாக கூடுதல் நீதிபதிகளாக பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியம் பிரசாத், என்.ஆனந்த வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் விரைவில் பதவியேற்க உள்ளனர். இதன்மூலம் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT