Published : 02 Jun 2018 07:28 AM
Last Updated : 02 Jun 2018 07:28 AM

மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பு: வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,302 ஆக நிர்ணயம்

வீட்டு உபயோகத்துக்கான மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.49.50 பைசா உயர்ந்து ரூ.734 ஆக உள்ளது. இதேபோல், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.78 அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்கான விலை நிர்ணயம் செய்து கொள்ள எண் ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் தற்போது உயர்ந்து வருகிறது. சர்வதேச நிலவரத்தின்படி சமையல் எரிவாயு சிலிண் டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

மத்திய அரசு வர்த்தக சிலிண்டர்களுக்கான மானியம் வழங்குவதில்லை. இதன் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இதனால், மாதம்தோறும் வர்த் தக சிலிண்டர்களுக்கான விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,143-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து கடந்த மாதம் ரூ.1,224-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இதன் விலை ரூ.78 அதிகரித்து ரூ.1,302 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டு உபயோகத்துக் கான மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.684.50-க்கு விற்கப்பட்டது. இது நடப்பு மாதம் ரூ.49.50 அதிகரித்து ரூ.734 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோகத்துக் கான சிலிண்டர் விலை ரூ.2.42 அதிகரித்து ரூ.481.84 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், வர்த்தக பயன்பாடு மற்றும் வீட்டு உபயோகத்துக்கான மானியமில்லா சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x