Published : 01 Jun 2018 10:11 AM
Last Updated : 01 Jun 2018 10:11 AM

புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை மாணவர்கள் பழைய பாஸ் பயன்படுத்தலாம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பாஸையே பயன்படுத்தலாம். மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என போக்குவரத்துக் கழக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பெரும்பாலான பள்ளிகள் இன்று (ஜூன் 1) திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக் கும்போது, உடனடியாக மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டுதோறும் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலும் விரைவாக அளிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடமிருந்து மாணவர்களின் முழு விவரங்கள் வந்தவுடன் உடனுக்குடன் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இருப்பினும் பள்ளிகள் தொடங்கி சில நாட்களில் அனைத்து மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிட்டுள்ளோம். புதிய பஸ் பாஸ் வழங்கும் வரையில் பழைய பஸ் பாஸையே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.’’ என்றனர்.

இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளி சீருடையுடனும், அடை யாள அட்டையுடனும் வரும் மாணவர்களிடம் பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நடத்துநர்கள் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x