Published : 01 Jun 2018 10:00 AM
Last Updated : 01 Jun 2018 10:00 AM

விடுமுறைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் போலீஸ், டிக்கெட் பரிசோதகர்கள் இல்லை என பயணிகள் புகார்

கோடை விடுமுறைகளில் விடப்படும் பெரும்பாலான சிறப்பு ரயில்கள், போலீஸ் மற்றும் டிக்கெட் பரிசோதகர் இல்லாமல் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ஆர்ஏசி டிக்கெட்டை உறுதி செய்வது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித் தனர்.

கோடை விடுமுறையில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சுவிதா மற்றும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிக கட்டணம் வசூலித் தும் ரயில் பயணத்தின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய அளவுக்கு போலீஸ் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் இருப்பது இல்லை என பயணிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக பயணி கள் சிலர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “கோடை விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்ற நாங்கள் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்தோம். ஆனால், அந்த ரயிலில் பாதுகாப்பு போலீஸாரும், டிக்கெட் பரிசோதகரும் இல்லை.

வழக்கமாக டிக்கெட் பரிசோதகர் வந்து ஆர்ஏசி டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு காலி இடங்களுக்கு ஏற்ப படுக்கை வசதியை ஒதுக் கீடு செய்வார். ஆனால், இந்தச் சிறப்பு ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வராததால் பயணிகள் அவதிப்பட்டனர். சாதாரண டிக்கெட் வைத்திருப்பவர்களும் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தனர். இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அவதிப்பட்டனர். இது தொடர்பாக புகார் அளிக்க டிக்கெட் பரிசோதகரோ, ரயில்வே போலீஸாரோ இல்லை. சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிர்வாகம், பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தராமல் இருப்பது ஏன்?’’என்றனர்.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) தரப்பில் கேட்டபோது, “பெரும்பாலான விரைவு ரயில்களில் போதிய அளவில் போலீ ஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சில விரைவு ரயில்களில் குறைந்த எண்ணிக்கையில் போலீஸார் நியமிக்கப்பட்டு வருகின்றனர். காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ரயில்வே துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, நாடுமுழுவதும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரைவில் நியமிக்கவுள்ளனர். எனவே, காலியாக இருக் கும் பணியிடங்களை இன்னும் சில மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x