Published : 01 Jun 2018 08:13 AM
Last Updated : 01 Jun 2018 08:13 AM

கடந்த ஆண்டைவிட டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் ரூ. 201 கோடி குறைவு

பேரவையில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தாக்கல் செய்த அத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனங்கள், 7 பீர் தயாரிப்பு நிறுவனங்கள், 1 ஒயின் தயாரிப்பு நிறுவனம் என 19 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ. 161.69 கோடி மதிப்புள்ள 10 லட்சத்து 8 ஆயிரத்து 625 பெட்டி பீர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தென்னை மரத்திலிருந்து நீரா பானம் தயாரிக்கவும், அதிலிருந்து இதர பொருட்கள் தயாரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18-ல் ரூ. 11.24 கோடி மதிப்புள்ள அயல்நாட்டு மதுபானங்கள் இறக்குமதி செய் யப்பட்டுள்ளன.

25-5-2018 நிலவரப்படி டாஸ்மாக் நிறுவனத்துக்கு 43 மதுபான கிடங்குகளும், 3 ஆயிரத்து 866 சில்லறை மதுபான விற்பனை கடைகளும், 1,456 சில்லறை விற்பனைக் கடைகள் மதுக்கூடங்களுடன் இணைந் தும் உள்ளன. இதில் ஒப்பந்த, தொகுப்பூதிய அடிப்படையில் 7,287 கடை மேற்பார்வையாளர்கள், 15,532 விற்பனையாளர்கள், 3,644 உதவி விற்பனையாளர்கள் பணியில் உள்ளனர். 19.6.2016 முதல் 500 கடைகள் மூடப்பட்டன. 24.2.2017-ல் மேலும் 500 கடைகள் மூடப் பட்டன.

டாஸ்மாக் மூலம் அரசுக்கு கடந்த 2015-16-ல் ரூ. 25 ஆயிரத்து 845 கோடியே 58 லட்சம், 2016-17-ல் ரூ. 26 ஆயிரத்து 995 கோடியே 25 லட்சம், 2017-18-ல் ரூ. 26 ஆயிரத்து 794 கோடியே 11 லட்ம் வருவாய் கிடைத்துள்ளது. 2016-17-ம் ஆண்டை விட 2017- 18-ம் ஆண்டில ரூ. 201.14 கோடி வருவாய் குறைந்துள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x