Published : 01 Jun 2018 08:09 AM
Last Updated : 01 Jun 2018 08:09 AM

வேளாண் பல்கலை. துணைவேந்தரின் ஓய்வு வயது உயர்வு: சட்ட மசோதா தாக்கல்

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:

1971-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சட்டத்தில் துணைவேந்தர் பதவிக்கான உச்ச வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

வேளாண்மை மற்றும் அது தொடர்பான அறிவியலில் கற்பதையும், ஆராய்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் வேளாண் கல்வியை ஊக்கப் படுத்துவது அவசியமாகிறது.

எனவே, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஓய்வுபெறும் வயதை 2009-ம் ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் உள்ளவாறு மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஓய்வுபெறும் வயது 70 ஆக நிர்ணயம் செய்யப்படும். இதற் காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டம் 8/1971-ல் திருத்தம் செய்ய முடிவு செய் துள்ளது. இவ்வாறு சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x