Published : 04 May 2018 09:10 AM
Last Updated : 04 May 2018 09:10 AM

தமிழகம் வந்த பிரதமர் மோடியின் பயணத் திட்டம் சமூக வலைதளத்தில் வெளியானது எப்படி?: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் ஏப். 11 முதல் ஏப். 14 வரை ராணுவக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்.12 திருவிடந்தை வந்தார்.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் நீண்ட நாட்களாகப் பிரச்சினை இருந்து வரும் சூழ்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பும் வெளியானது. ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல் படுத்தாமல் மத்திய அரசு தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக் கல் செய்தது.

இந்நிலையில் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்வதாகக் கூறி, மத்திய அரசின் இச்செயலுக்கு எதிர்ப்பு தேரிவித்து தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் அறிவித்திருந்தன. இதனால் தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி யின் பயணத் திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது பயண விவரம் வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் வெளிவந்தன. அதில் பிரதமர் மோடி விழாவில் பங்கேற்க உள்ள இடங்கள், நேரம் ஆகியவை துல்லியமாக குறிப்பிடப்பட்டிருந்தன. அவரது பயணத் திட்டம் முன் கூட்டியே வெளியா னது காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது.

இதனால் அவர் வருகையின் போது பலர் ஆங்காங்கே கூடி அவருக்கு கருப்புக் கொடி காட்டி மற்றும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டரிலும் மாற்றுப் பாதையிலும் திருவிடந்தைக்கு செல்ல வேண்டியிருந்தது.

வாட்ஸ்-அப்பில் செய்தி

வாட்ஸ்-அப் குழுக்களில் மோடியின் பயணத் திட்டம் வெளியானது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ஜான் மரிய ஜோசப் காஞ்சிபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக் குப் பதிவு செய்தனர். இந்த வழக் குப் பதிவு செய்யப்பட்ட விவரம் யாருக்கும் தெரிவிக்காமல் மிகவும் ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் கேட்டபோது, பிரதமரின் பயணத் திட்டம் வெளியானது தொடர்பாக மாவட்டக் குற்றப்பிரிவு போலீ ஸார் வழக்குப் பதிவு செய்தது உண்மை. ஆனால், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இனிமேல் அவர்கள்தான் விசாரணை நடத்துவார்கள் என்றார்.

சைபர் கிரைம் பிரிவு மூலம்

இந்த வழக்கு குறித்து காவல்துறை வட்டாரங்களைக் கேட்ட போது பிரதமர் மோடியின் பய ணத் திட்டம் வாட்ஸ்-அப் குழுக்களில் யார் மூலம் வெளியே வந்தது என்பதை அறிய சைபர் கிரைம் போலீஸாரின் உதவி தேவை. சிபிசிஐடியில் உள்ள சைபர் கிரைம் பிரிவு மூலம் இந்திய அளவில் எங்கிருந்து முதலில் இந்தத் தகவல் பரப்பப்பட்டது என்பது தொடர்பாக தெரிந்துகொள்ள முடியும். எனவே இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x