Published : 04 May 2018 09:06 AM
Last Updated : 04 May 2018 09:06 AM

மாநகர பேருந்து ஓட்டுநர்களின் மனஅழுத்தத்தை குறைப்பது எப்படி?: உளவியல் வல்லுநர்கள் யோசனை

மாநகர போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனஅழுத்தத்தை குறைப்பது தொடர்பாக கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) உளவியல் வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

தமிழக அரசு சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு பல்வேறு போக்கு வரத்து அலுவலங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சி யாக கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாநகர போக்குவரத்து ஊழியர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர் களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் குறைப்பது குறித்து கொளத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் உளவியல் வல்லுநர்கள் டாக்டர் வந்தனா, சோபா ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி. அசோக்குமார், வாகன ஆய்வாளர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, ஜி. ஆனந்தன், சி.ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ ஜி. அசோக்குமார் கூறுகையில், ‘‘நாட்டில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களே முக்கிய காரண மாக இருக்கின்றனர். எனவே, வாகனம் ஓட்டிச் செல்லும்போது அவர்களின் மனநலம் மற்றும் உடல்நலம் சீராக இருப்பது அவசியம். நீண்ட நேரம் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு தூக்கமின்மை, மனஅழுத்தம் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதில்லை. எனவே அவர்கள் தினமும் மேற்கொள்ள வேண் டிய சிறிய உடற்பயிற்சிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் களும், ஆட்டோ ஓட்டுநர்களும் பங்கேற்று பயனடைந்தனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x