Published : 09 Apr 2018 07:52 AM
Last Updated : 09 Apr 2018 07:52 AM

பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஜெ. ஆட்சியில் ராஜ் பவனில் நேர்காணல் நடந்தது உண்டா?: தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி

ஜெயலலிதா ஆட்சியில் துணைவேந்தர் பதவிகளுக்கு ஆளுநர் மாளிகையில் நேர்காணல் நடந்தது உண்டா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் கல்வித் துறையை காவிமயமாக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு கலை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்துக்கு கேரளத்தைச் சேர்ந்த, ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட ஒருவரையும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திராவைச் சேர்ந்தவரையும் துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமித்துள்ளார்.

முதல்வர், அமைச்சர்கள் உட்பட அதிமுகவினர் அனைவரும் எதற்கெடுத்தாலும் இது ஜெயலலிதாவின் அரசு என கூறி வருகின்றனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் துணைவேந்தர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகையில் நேர்காணல் நடந்தது உண்டா?

எனவே, துணைவேந்தர் நியமனம் குறித்து விளக்கம் கூற வேண்டாம். ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்பதற்கு அதிமுகவினர் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x