Published : 06 Apr 2018 07:08 PM
Last Updated : 06 Apr 2018 07:08 PM

ஆம்பூர் அருகே வயலில் திடீரென இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்: பொதுமக்கள் ஓட்டம்

ஆம்பூர் அருகே வயல்வெளியில் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் ஹெலிகாப்டர் பழுதானதால் அவசரமாக தரை இறங்கியதாகத் தெரிந்து நிம்மதி அடைந்தனர்.

வானத்தில் மட்டுமே வட்டமிட்டுப் பார்த்த ஹெலிகாப்டர் திடீரென வயலில் சத்தத்துடன் இறங்கினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு அனுபவத்தை இன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள குளிதிகை பகுதி மக்கள் அனுபவித்தார்கள்.

பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஆம்பூர் அருகே பறந்துகொண்டிருந்த போது திடீரென இன்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரை அப்படியே இயக்கினால் கீழே விழுந்து நொறுங்கிவிடும் என்பதால் பைலட் ஹெலிகாப்டரை உடனடியாக குளிதிகை கிராமத்தில் உள்ள ஒரு வயலில் இறக்கினார். கடகடவென பலத்த சத்ததுடன் ஒரு மாதிரி நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.

ஆனால், வயலில் இறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து 4 ராணுவ வீரர்கள் இறங்கினர். தங்களது ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆனதால் தரை இறங்கியதாகத் தெரிவித்தனர். இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் பயத்தை விட்டு அவர்களிடம் வந்தனர். பின்னர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர்.

ராணுவ வீரர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து பெங்களூருவிலிருந்து மற்றொரு ஹெலிகாப்டரில் வந்த தொழில்நுட்பக்குழுவினர், ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்தனர். ஆயில் ஒழுகுவது சரிசெய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x