Last Updated : 20 Mar, 2018 03:18 PM

 

Published : 20 Mar 2018 03:18 PM
Last Updated : 20 Mar 2018 03:18 PM

என் பின்னால் பாஜக இல்லை - ரஜினிகாந்த் பேட்டி

‘என் பின்னால் பாஜக இல்லை’ என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.

ஆன்மிகப் பயணமாக கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த். இமயமலை, ரிஷிகேஷ், தர்மசாலா உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், 10 நாட்களுக்குப் பிறகு இன்று பிற்பகல் சென்னை திரும்பினார்.

போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், “புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. ஆன்மிகப் பயணம் சென்று வந்தபிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. ரத யாத்திரை என்பது மதக் கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மதக் கலவரம் எந்த வடிவில் வந்தாலும், அரசு அதனைத் தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

சினிமாத்துறையில் நடக்கும் ஸ்டிரைக் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “முதலில் இருந்தே நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், சினிமாவில் வேலை நிறுத்தம் என்பதை மட்டும் செய்யவே கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும். கமல்ஹாசன் என்னைப் பற்றிய கருத்துக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

‘உங்கள் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுகிறதே...’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “என் பின்னால் பாஜக இல்லை. என் பின்னால் இருப்பது கடவுளும் மக்களும்தான்” என்று பதில் அளித்தார் ரஜினிகாந்த்.

மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x