Last Updated : 03 Mar, 2018 05:43 PM

 

Published : 03 Mar 2018 05:43 PM
Last Updated : 03 Mar 2018 05:43 PM

புதுவைக்கு திட்டங்கள் அறிவிக்காததால் மோடி மீது மக்கள் அதிருப்தி: நாராயணசாமி

 

புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய பயணத்தின் போது, யூனியன் பிரதேசத்திற்கான எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் அறிவிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்ததாவது:

''புதுவையில் பிரதமர் வருகை முன்பு எப்போதெல்லாம் நிகழ்ந்துள்ளதோ, அப்போதெல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் புதுவைக்கு வரும்போது புதுவைக்கென வளர்ச்சித் திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் திரும்பிச் சென்றுள்ளார். அதனால் மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பிரதமர், புதுச்சேரிக்கு பிப்ரவரி 25-ம் தேதி பயணம் மேற்கொண்டபோது அவரிடம் ஒரு விரிவான கோரிக்கை வழங்கப்பட்டது. யூனியன்பிரதேச அரசின் தற்போதைய நிதி நெருக்கடி பற்றி அக்கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவிரி நீரை பகிர்ந்துகொள்வதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தினேன். தேவையானவற்றை செய்வதாக எனக்கு உறுதியளித்தார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஒரு ஊழலில் ஈடுபட்டதாக அவரை கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கம்கொண்டது. மத்திய அரசு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபடுவதை இடைவிடாமல் சுட்டிக்காட்டும்விதமான செயலே இது.''

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x