Published : 03 Mar 2018 09:39 AM
Last Updated : 03 Mar 2018 09:39 AM

பராமரிப்பு பணியால் 20 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் 20-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப் படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆவடி - பட்டாபிராம் வெஸ்ட் சைடிங் இடையே இன்றும், நாளையும் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

3-ம் தேதி ரத்தாகும் ரயில்கள்

வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 8.20, 9.15, 12.55 மணி மின்சார ரயில்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 11.15, மதியம் 12.20, 1.00 மணி, வேளச்சேரி - திருவள்ளூர் மதியம் 12.15, 2.35, வேளச்சேரி - அரக்கோணம் மதியம் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஒரு பகுதி ரத்தாகும் ரயில்கள்

பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - வேளச்சேரி காலை 8.45, திருத்தணி - வேளச்சேரி காலை 8.50, திருவள்ளூர் - வேளச்சேரி காலை 11.05, ஆவடி - வேளச்சேரி மதியம் 12.10, கடம்பத்தூர் - வேளச்சேரி மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம், வேளச்சேரி - ஆவடிக்கு 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 9.30, 9.45, 11.30, மதியம் 12.10, வேளச்சேரி - திருவள்ளூர் காலை 9.05, சென்ட்ரல் ரயில் நிலையம் - திருத்தணி காலை 10, 11.45 மணி, வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 9.15, சென்ட்ரல் - கடம்பத்தூர் காலை 10.30, மதியம் 12, அரக்கோணம் காலை 11.05, மதியம் 12.50, பட்டாபிராம் மதியம் 12.20 மணி, வேளச்சேரி - திருத்தணி காலை 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் விரைவு பாதையில் இயக்குவதால், ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காது.

4-ம் தேதி ரத்தாகும் ரயில்கள்

சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 9.10, 10.05, சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 11.15, மதியம் 12.20, 1.00 மணி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - ஆவடி, திருநின்றவூர், சென்ட்ரல் - திருநின்றவூர், ஆவடி - சென்ட் ரல் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன.

சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 9.30, 9.45, 11.30 மதியம் 12.10, திருத்தணி காலை 10, 11.45 மணி, கடம்பத்தூர் காலை 10.30, மதியம் 12 மணி, அரக்கோணம் காலை 11.05, மதியம் 12.50, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் காலை 11.15 மதியம் 12.20, 1.00 மணி மற்றும் சென்னை கடற்கரை - திருவள்ளூர் காலை 9.50, மதியம் 1.05, பட்டாபிராம் சைடிங் காலை 10.05, திருத்தணி மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் நிற்காது.

3, 4 தேதிகளில் மாற்றம்

அத்திப்பட்டு யார்டில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில்சேவையில் மாற் றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட் ரல் - கும்மிடிப்பூண்டி மதியம் 12.20 மணி மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 10.25, 11.35 மணி சூலூர்பேட்டை மதியம் 12.40 மணி, கும்மிடிப்பூண்டி மதியம் 1.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

2, 4, 5 தேதிகளில் மாற்றம்

சூலூர்பேட்டை - கும்மிடிப்பூண்டி இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் மின்சார ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, சென்ட்ரல் - சூலூர்பேட்டை இரவு 10.35 மணிக்கு புறப்படும் மின்சாரரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x